வேறு
18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு
வணிகந் துன் னி
ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க
உ ளெல்லாம்
ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும்
தாய்வுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப்
பெயர்பெற் றாரே,
19. பானுரை போலப் பஞ்சிற் பட்டி.னன் மயிரிற்
பொன்னின்
நானிரைத் துள்ளங் கொள்ள நுணிகிய சாய மேற்றி
மேனிலத் தவர்மக் கொள்ள விழைதரு வனப்பிற் றாகப்
பூநிரைத் தணியா ராடை புதுமையி னெய்வார் நெய்வார்.
20. ஐவகைப் பொன்னிற் றாரி னவிர்மணி யொடுகல்
மண்ணில்
கைவகைக் கலனும் பன்மைக் கருவியு மேனந் தானும்
செய்வகைப் படியே தட்டார் திறன் மிகு தச்சர்
கொல்லர்
மெய்வகைக் குயவர் கண்ணார் வேதர்கற் றச்ச ரானார்.
21. அழுக்கற வெளுத்து வண்ணா மாக்குவோர் வண்ணார்,
பின்னர்
மழுக்குற மயிரை கொய்தின் மழிப்பவர் மழிப்பர்,
வாய்மை
ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர், மற்றும்
வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர்
பெற்றார்.
18. குடித்தொழில் - வெளுத்தல், மழித்தல் முத
லியவை. 19. பால் நுரை. நூல் விரைத்து - நூற்
களை வரிசையாகப் பாய்ச்சி, பூ-பூ வேலைப்பாடு.
20. தாரு-மரம். கற்றச்சு-சிற்பம். 21. ஓவம்.
சித்திரம்,
பக்கம்:இராவண காவியம்.pdf/53
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
