பக்கம்:இராவண காவியம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒழுக்கப் படலம் 8. 25. குலவு செல்வமுங் கல்வியயுங் குடிவளர் கோட்டத் தலைவ ராயசிற் றரசர்கீ மூரகத் தலைவர் மலைவி லாதெலா மக்களும் தகவுற வாழக் கலைவ லாருளக் கருத்தொடு கனிவுறக் காத்தார். தூய லூரகந் தனையினி தோம்பிடத் தொல்சீர் மேய நல்லரை நிறுவவூர் மக்களம் மேலோர் ஆய யாவையும் குறைவிலா தமைவுற வாக்கித் தாயி னும்பெரி தன்புடன் காத்துவந் தனரே, மக்க ளுந்தலை! மக்களு நானிலத் திடைவார் மக்க ளுந்தலை மக்களும் வகைபடு தொழில் செய் மக்க ளுங்கருப் பொருளெ னு மனை யறத் தலைமை மக்க ளாங்கிற வனுங்கிழத் தியுமென வாழ்ந்தார். 28. ஒத்த வோர்குல மாகியே யொருங்குற வாழ்ந்த முத்த மிழ்ப்பெரு மக்களைக் கற்றறி 1/'டர் பொத்தை யாய்ப்பெறும் பிறவிவேற் றுமையெனப் புகல்வர் பித்தர் சொல்லினைப் போற்றுவோ ரொருவகைப் பிறப்பே , 5 ஒழுக்கப் படலம் வேறு 1. ஒப்பாரு மில்லாத வுலகேத்துந் தமிழ்மக்கள் எப்பாலுந் தமக்குரிய வியனெறியாஞ் செயன்முறையில் றப்பாமற் செய்வனவுந் தவிர்வனவுங் கடைப்பிடித்து முப்பாலின் படியொழுகி முறைமையொடு வாழ்ந்தனரால். அன்பாகி யருளாகி யறிவாகி யுலகுயிரின் முன் பாகி யொளியாகி முதலாகி முடியாத இன் பாகி யியல்கின்ற இறைவாழ்த்தி முறைவாழ்ந்தார் தன்போலப் பிறவாழ்வு தனைப்பேணும் பழந்தமிழர். ' 95, கோட்டம்-நாடு. ஊரகம்-கிரசிமம். 27. கிழவன், கிழத்தி-காதற்றலைவர்,