பக்கம்:இராவண காவியம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இலங்கைப் படலம் 82. அதன்பின்ன ரேவையை யாற்றினது கரையுடைய புதுமதுரை யதுகண்டு புகழ்பூத்தார் பாண்டியர்கள், இதுவாக வேசோழ ரெழில் பூத்த புகார்நகரம் அதுவாகத் தமிழ் வளர்த்தே யரசுவீற் றிருந்தனரால். 33. பின்னருமத் தீயாழி பெருவயிறு நிரம்பாது மன்னியசீர்க் கடைக்கழக காலத்தே வாய்வைத்துப் பொன்னலரும் புன்னையங்காப் புகார்முதலா கியவுண்டே இந்நிலைமை யாக்கியதா லினும்பசிதீர்ந் திலவேயோ ? 8. இலங்கைப் படலம் வேறு 1. 'தறைகட லுண்டல் கண்டாம், தமிழக முழுது மொன்றை வறியவ னினிதி னோம்பும் வகையினன் முறையி னோடு திறைதர மலையங் கானுந் திரையொடு நாடுஞ் செல்வம் இறையிரா வணன் முன் காத்த இலங்கைநாட் டியல்பு காண்பாம். 2. பெருவள மொடுதென் பாலி பெயல்வள மருதத் தோடு பொருகடல் விழுங்கிக் கொண்டு போயபின் றனித்து நின்ற திருவிட மதன்றென் பாங்கிற் சிதறிய தீவுக் கெல்லாம் ஒருபெருந் தலைமை தாங்க யொளிர்ந்ததவ் விலங்கை நாடே. 3. குடக்கொடு குணக்குத் தெற்குக் கொடுங் கடல் வளைத்துக் காப்பு வடக்கினில் வளங்க ளெல்லாம் வாய்திரா விடத்தின் பாங்கர் நடக்குறும் படிக்கு வாரி நடக்கிலா நிலமா வற்றின் இடைக்கும் மூக்குப் போல் விருந்ததவ் விலங்கை நாடே. 32. புகார்-கா கவிரிப்பூம் பட்டினம். 1. செல்வமாகிய திறையைத் தா. இறை-தங்கியிருந்து. 3. மருதம்-கிழக்குகாடு. 3, வாசி-கடல். குடமூக்-தீவகற்பம்.