பக்கம்:இராவண காவியம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 இராவண காவியம் 24. பலகுட்டி யொருதாயின் பாலுண்ட பயக்குறையால் வலியற்றுப் போமானோர் வளர்குழியில் வளமின்றிப் பலநாற்றை நட்டில்லாப் பயனுடைய ராகாமல் நலமுற்றும் பெறவொற்றை நாற்றாக நடுவாரே. வழிபொலிய மாணாக்கர் மனத்தகத்தே நட்டதமிழ் மொழிபொலிய வறிவென்னு முளைகிளம்பித் தழைப்பதுபோல், விழிபொலியப் டச்சென்று விழைவொடுசேற் அ றிடைநட்ட.. குழிபொவிய விள காற்றுக் குருத்துவிட்டுத் " தழைத்ததுவே. 26, அருந்தமிழி னிடைகலந்த வயன் மொழிச்சொற் களை களைந்து தருந்தகைமை யோடு தனித் தமிழ்வளர்க்கும் பெரியார்போல், அருந்தியுண வினைப்பயிரை யலக்கழிக்குங் களை களைந்து திருந்தியுர மொடுசெழிக்கச் செய்து பயிர் வளர்ப்பாரே. 27. அசும்பாரும் பயிர் வளர்வுற் றருஞ்சூல்கொண் டிரையுண்ட பசும்பாம்பின் றோற்றம்போற் புடைகட்டிப் "பால்பிடித்து விசும்பாருஞ் செல்வரெனத் தலைநிமிர்ந்து விழுக்கல்வித் தசும்பாரும் பெரியாரிற் றலையிறைஞ்சிக் காய்த்ததுவே, 28. ஆய்ந்து தமிழ்ச் சங்கத்தா ரருந்தமிழ்ப்பாக் . களைத் தொகுத்துத் தீந்தமிழின் பனுவல்பல செய்துல்கஞ் செய்குதல்போல், காய்ந்தமணிக் கதிரறுத்துக் களத்தடித்துப் பதர்கழித்துப் போந்தமணிக் குவை தூற்றிப் பொலிவெய்திப் பொலிவாரே. 27. அசும்பு-சே று. சூல்-கரு. திசுழ்பு-பொன், செல்வம்- கல்விச்செல்வம்.