பக்கம்:இருட்டு ராஜா.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 இருட்டு ராஜா 'கொசுவா, அது ஒவ்வொண்ணும் எத்தாத் தண்டி இருக்கு!’’ ஒலுங்கு அது பேரு. ஊசி குத்தறாப்பலே சுருக் சுருக்குனு கடிக்கும்' என்று முத்துமாலை விளக்கினான். 'கொசு இல்லாத வேறு என்னென்னவோ ஜந்துக் கள்ளாம் பறந்து வருது. மொய்க்குது, பிச்சுப் பிடுங்குது. உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா ஆயிடுது. இந்த ஊருக் காரங்க எப்படித்தான் துரங்குறாங்களோ தெரியலே!' "பழகிப் போச்சு அதுதான் காரணம். முன்னாலெல் லாம் வயல்களிலே பயிர் இல்லாத காலத்திலேதான் ஊருக்குள்ளே கொசு அதிகமா வரும். வீட்டுக்குள்ளே எரு குச்சி செத்தையை எல்லாம் போட்டு தீக்கங்கை வச்சுப் புகை மூட்டம் போடுவாங்க, கொசுகுக செத்துப் போகட்டும்னு. வயலுகளிலே பயிர் வளர்ந்து கதிர் வச்சு, தெல்லிலே அன்னம் கோதியாச்சுன்னு சொன்னா, ஊருக் குள்ளே கொசு குறைஞ்சு போம். கொசுகுக வயல் காட் டிலே பயிர்களிலே கதிர்களில் ஊறுகிற பாலைக் குடிக்கப் போயிரும்னு சொல்லுவாங்க. பிறகு பிறகு என்னாச்சு? எல்லா நாட்களிலும் கொசு நிறைய ஊருக்குள்ளே வீடு களிலே, மொய்ப்பதே சகஜமாப் போச்சு. அதுகளுக்கு கதிர்களிலே ஊறுகிற பாலோட ருசியை விட ஊரு ஆள் களின் உடம்பிலே ஒடுற ரத்தத்தின் டேஸ்ட்டுத்தான் ஜோராயிருக்கு போலிருக்கு: - இதைச் சொல்லிவிட்டு முத்துமாலை சிரித்தான். தங்காசும் லேசாகச் சிரித்து வைத்தான். நீ மட்டும் தான் வந்திருக்கியா ராசு? வீட்டிலே புள்ளைகளை கூட்டி வரலையா?’ என்று கேட்டான் முத்துமாலை. "அவளும் புள்ளைகளும் அவ அப்பா வீட்டுக்குப் போயிருக்காங்க. கொஞ்ச நாள் கழிச்சு இங்கே வரு வாங்க... .