பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் திரு. முதலியார். இவர் பாட்டனார் கிழக்கிந்தியக் கம்பெனியில் துவிபாஷியாராய் (மொழி பெயர்ப் பாளராய் இருந்தவர். இவர் தந்தையார் திரு. கோபாலசாமி முதலியார் சேலத்தில் செல்வாக்கு மிகுக்த நிலவுடைமையாளராய் விளங்கியவர்; தாசில் தாராய் இருந்தும் புகழ் ஈட்டியவர். இவ்வாறு கல்வியறிவும், செல்வச் சிறப்பும் நிறைந்த குடியில் தோன்றிய திரு. இராமசாமி முதலியார் தம் ஆறாம் ஆண்டிலேயே சென்னை மாநகர்க்குக் கல்வியின்பொருட்டு அனுப்பப்பட்டார். தமிழகத்தின் தலை நகரில் அந்நாளில் இவருக்குப் பாதுகாவலராய் அமைந்த பெரியார் புகழ் மிக்க பெரும்புலவர் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் மைந்த சாகிய திரு. நாகலிங்க முதலியார் என்பவர். கதிர்வேலு உவாத்தியாயர் என்பவரிடம் ஆ ரம்பக் கல்வி பயின்ற நம் முதலியார், சென்னைப் பல்கலைக் கழகத் திற்கே வித்தாய் விளங்கிய சென்னை உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார் பின்னர் அப்பள்ளியினின் றும் பச்சையப்பர் பள்ளியில் சேர்ந்து அறிவொளி பெற்ருறார் அதன் பின்னர் மாநிலக் கல்லூரியில் மறுபடியும் சேர்ந்து கல்வித்துறையில் வல்லாராயினர். மெற்றிக்குலேஷன் தேர்வில் திரு. முதலியார் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, அரசாங்க உதவி நிதி பெற்றார் மாநிலக் கல்லூரியில் பேராசிரியர்கள் மதிக்கும் பெருநிலையையும், எண்ணற்ற பரிசுகளேயும் எய்திஞர், சென்னைப் பல்கலைக் கழகத்தாரின் கலை முதல் தேர்வில் முதல்வராய் வெற்றி பெற்ருர், வரலாறு, ஆங்கிலம், தமிழ் ஆகிய துறை களில் புலமையுற்ருர். 1871-ஆம் ஆண்டில் கலை இளைஞர் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வராய் வெற்றி