உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய யன், 'அப்படியே ஆகுக!' என்றான்; அதற்கான ஆணையும் பிறப்பித்தான். 108 கார்சிகா தீவினருக்கு, தங்கள் நாடு, தங்கள் ஊர், தங்கள் குடும்பம் என்ற உணர்ச்சி மிகுதியாக உண்டு. நெப் போலியனுடைய தந்தை, சார்லஸ் போனபார்ட்டி, இந்த உணர்ச்சி காரணமாகத்தான், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடு பட நேரிட்டது; நெப்போலியனுக்கும் இந்த எண்ணம் இள மைப் பருவத்தில் மிகுதியும் இருந்தது. பிரான்சுமீதே நெப் போலியனுக்கு வெறுப்பு, கோபம், பழி வாங்க வேண்டும்-- கார்சிகாவை விடுவிப்பதன் மூலம் - என்று எண்ணம் கொண் டான். அதற்கு ஏற்றபடிதான், பிரான்சு நாட்டினரும், கார் சிகா மக்களைப் பற்றி மிகத் துச்சமாக மதித்துப் பேசி வந் தனர்; ஏளனம் செய்து வந்தனர். ஏழைக் குடும்பம் என்பதற்காக ஒரு ஏளனப் பேச்சு! அடிமைப்பட்டுக் கிடந்த கார்சிகா தீவினன் என்பதற் காக மற்றோர் கேலிப் பேச்சு. இந்த இருவித ஏளனக் கணைகளைத் தாங்க வேண்டி இருந்தது, நெப்போலியனுக்கு-மாணவப் பருவத்தில். வீராதி வீரர்கள் என்கிறாயே! உன்னுடைய கார்சிகா பக்களை, அது உண்மையானால், எப்படி அவர்கள், பிரான் சுக்கு அடி பணிய முடிந்தது!" அதுவா! ஒன்றுக்குப் பத்து என்ற அளவில், உங்கள் பிரான்சுக்காரர், எங்கள் கார்சிகா மக்களைத் தாக்கினர். வீழ்ந்தது அதனால்தான்; வீரம் இல்லாததால் அல்ல.” "மீசையில் மண் ஒட்டவில்லையாம்.. கேட்டீர் களா... பொறு! பொறு! நான் பெரியவனான பிறகு பார்! அப்போது தெரியப் போகிறது. கார்சிகாக்காரர் எப்படிப்பட் டவர்கள் என்பது.'