உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o TH * - o # விய ■ 96 இருளும் ஒளி யும்

வில்லை. தற்செயலாக வழியிலேயே மாப்பிள்ளைப் பையனைச் சந்தித்தேன். ஏண்டா அப்பா! நீ செய்கிறது நன்முக இருக் கிறதா?’ என்று கேட்போம் என்று பார்த்தால் அங்கே ஏகப் பட்ட அமர்க்களம். அவன்தான்் திறந்த வாப் மூடாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிருனே. அவனே என்னத் தைக் கேட்கிறது?’ என்று ராமு சொன்னன். அவன் பொய்யா சொல்லப் போகிருன்?'

சரி, சரி, போதும். இனிமேல் நீ யாரிடமும் எதையும்

விசாரிக்க வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும் போ' என்று அலுப்புடன் கூறிவிட்டுச் சாவித்திரி அங்கிருந்து எழுந்து விட்டாள். எழுந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று

கதவைத் தாழிட்டுக்கொண்டு காகிதத்தையும், பேளுவையும். எடுத்தாள். மளமளவென்று கணவனுக்குக் கடிதம் எழுத ஆரம்: பித்தாள். கோபத்தாலும், ஆங்காரத்தாலும் அவள் கைகள்: தடுங்கின. பேணுவிலிருந்து அங்கங்கே இரண்டு சொட்டுகள் மசியும் காகிதத்தில் விழுத்தன. கடிதம் எழுதி முடித்ததும்! அதை வாசிக்க ஆரம்பித்தாள். 事

அன்புள்ள கணவருக்கு என்ருே, ஆருயிர்க் காதலருக்கு என்ருே கடிதம் ஆரம்பிக்கப்படவில்லை.

'நமஸ்காரம். பத்திரிகைகளில் வெளியாகி இருந்த புகைப் படங்கள் மிகவும் அபாரம்! கட்டிய மனைவி ஒருத்தி இருக்கிருள் என்பதை மறந்துவிட்டு உங்களுடைய கலை வேஷம் நன்ருக இருக்கிறது! அந்த இன்னெரு பெண் யார் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்களா?'

கடிதம் பைத்தியக்காரத்தனமாக எழுதப்பட்டது. ஆத்தி ரத்தில், அவசரத்தில் "என்ன எழுதுகிருேம் என்பதைக் கவனியா மல் எழுதப்பட்டது. சாவித் திரிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை: தோன்றியது. "நாம் ஏன் அவருக்குக் கடிதம் ಆಮಿಷ @ಹಿಃ। கடிதம் எழுதி அவர் சொந்த விஷயங்களில் தலையிட நழக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இருவரையும் பலமாகப் பிணைக் கும் கணவன்-மனைவி என்கிற பந்தத்தைத் தவிர வேறு என்ன உரிமையுடன் அவரைக் கேட்க முடியும்?' என்று ஒன்றும் புரியா மல் கடிதத்தைச் சுக்கு நூருகக் கிழித்துக் கீழே போட்டாள் சாவித்திரி. குமுறும் ஹிருதயத்தைக் கையில் அழுத்தியவாறு, தேம்பித் தேம்பி அழுதாள் அவள். இந்த நிலையில் பிரமை