பக்கம்:இருளும் ஒளியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இருளும் ஒளியும்

ஏறிஞர்கள். ' அத்தான்்! நான் திரும்பி வரும்போது நீ தனியாக இருக்கக்கூ ட . கட்டாயம் சாவித் திரியை அமுைத்து வந்து விடு' என்று உண்மையான அன்புடனும் அதுதாபத்துடனும் வரஸ்வதி கூறி அவனே ரெயில் ஏற்றினுள். ரகுபதியின் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு அரை மணி கழித்துத்தான்் ஸரஸ்வதி யின் ரெயில் கிளம்ப வேண்டும். ரெயில் சென்ற திசையைச் சிறிது நேரம் பார்த்துக்கொண் டிருந்துவிட்டு நிறைந்த மனத்துடன் ஸ்ரஸ்வதி பெருமூச்சு விட்டாள். தீபாவளி கொண்டாடிவிட்டு மனைவியுடன் ரகுபதி ஊருக்குத் திரும்பி விட்டான் என்று அறிந்தால், அவள் சமீபத்தில் ஊருக்குத் திரும்பக் கூடாது என்று தீர்மானித்துக்கொண்டாள். ரெயிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ரகுபதி சிறிது நேரம் வரையில் அங்கு என்ன நடைபெறு கிறது என்பதைக் கவனிக்கவில்லே. பித்துப் பிடித்தவன் போல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்். இரவின் அமைதியைக் கலைத்துக்கொண்டு வனப் பிரதேசத்தில் "தட தட'வென்று ரெயில் சென்றுகொண் டிருந்தது. அத்துடன் குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. தாயார் கொஞ்ச நேரம்

சமாதான்ம் செய்து பார்த்தாள். பிறகு தகப்பஞர் சீராட்டிப் பார்த்தார். அழுகை ஓய்ந்த பாடில்லை. இருவரும் மனம் சவித்தவர்களாக, சனியனே! என்னதான்் வேண்டுமென்று

சொல்லித் தொலையேன்" என்று இரைந்து கோபித்துக்கொண் டார்கள் குழந்தையை! குழந்தை அழுதுகொண்டு தன் மழலை மொழியில், நீ ஆண்டாம் போ. . . . பாட்டிதான்் வேணும். பாட்டிகிட்டே தாச்சுக்கணும் போ' என்றது.

அப்பாடா' என்று பெற்ருேர் பெருமூச்சு விட்டனர். ஒடுகி ரெயிலில் ஊரிலிருக்கும் பாட்டியை எப்படி வரவழைப் பது என்று புரியாமல் திகைத்தனர். இருவரும் படும் சிரமத் தைப் பார்த்து ரகுபதி கூடையை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான்்.

'இந்தா பாப்பா! பாட்டியிடம் காலம்பற போகலாம்' என்று கூறி அவைகளை குழந்தையிடம் கொடுத்தான்். தங்க நிறத்தில் பளபள வென்று உருண்டு விளங்கும் பழங்களைத் தன் குஞ்சக் கரங்களால் குழந்தை வாங்கிக்கொண்டு சமாதான்ம் அடைந்தது. இந்தக் காட்சியை ரசித்த பெரியவர் ஒருவர். 'இதைத்தான்் குழந்தை மனம் என்கிறது, ஸார்! நம்மால் லேசில் திருப்தியடைய முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன.