பக்கம்:இருளும் ஒளியும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3G

கானல் நீர்

விசாலமான ஏரியில் காற்றினுல் எழுப்பப்பட்ட சிற்றலேகள்

r நெளிந்து சுருண்டன. "சுரி ரென்று வான வீதியில் பவனி வரும் சூரியனின் பொன் கிரணங்கள் நீரில் தவழ்ந்து விளையாடின. நல்ல மழை காரணமாக ஏரி தளும்பி வழிந்தது. அதற்கடுத்த வயல்களில் நல்ல விளேச்சல். குழந்தையைக் காக்கும் தாயைப்

போல, கிராமவாசிகள் பயிர்களைக் கண்ணின் கரு மணிபோலக் காத்து வந்தார்கள். அவர்கள் வாழ்வும், தாழ்வும் அதில்தான்ே இருக்கிறது. "டைப் அடித்துப் பிழைப்பவர்களாக இருந்தால் ஓர் இடத்தில் வேலே போனல் இன்னென்று என்று தேட இட மிருக்கிறது. தொழிலாளிகள் அவர்கள் கற்ற தொழிலைத் தான்் போஷித்து வளர்க்கவேண்டி இருக்கிறது. அவர்களை வாழ:

வைக்கும் மண்ணே நம்பிக் குடியானவர். ' வாழ்கிரு.ர்கள். அதில் கிடைக்கும் பலாபலன்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிரு.ர்கள். *

மனிை மணியாய்க் கதிர்களில் நெல் மணிகள் அரும்பி இருந்தன. ஆயிற்று: கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. மார்கழியும் போனல் தைப் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்துவிடுவார்கள். உழைப்பின் பலனை அநுபவித்து உள்ளம் நிறைவு பெறுவார்கள். வீட்டில் பெட்டி, படுக்கையைக் கூடத் தில் வைத்துவிட்டு ரகுபதி ஏரிக்கரைக்கு வந்து. உட்கார்ந்திருந்: தான்். தொலைவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆடி அசைந்து வந்துகொண் டி ருந்தது. பன்னிரண்டரை மணி பஸ் வந்துபோய்விட்டது என்பதற்கு இந்தச் சவாரி வண்டிகள் தான்் அத்தாட்சி. ஏனெனில், வெளியூரிலிருந்து வருபவர்கள் ரெயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்கு வருவதாளுல் மத்தியான் னம் இந்தப் பஸ்ளிலாவது அல்லது மாலை ஐந்தரை மணி பஸ்ஸிலா வதுதான்் வரமுடியும். அப்படிப் பிரயாணிகளைக் கருணையுடன் சுமந்துவரும் பஸ் அவர்களை ஏரிக்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே சாலையில் இறக்கிவிட்டுப் போய்விடும். கால் களில் தெம்புள்ளவர்கள் நடந்து கிராமத்தை அடைந்து விடுவார்