உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இருளும் ஒளியும்

காக்கை கத்துகிறது. அத்திம்பேர் வர ப்போகிருர்' என்று சொல்லி ஆனந்தப்பட்டாள் தோ. அந்த வார்த்தைகளை மறுபடியும் அவள் சொல்லிக் கேட்கவேண்டும்போல் சாவித் திரிக்குத் தோன்றியது.

ஏண்டி சாவித்திரி! அத்திம்பேர் வரும்போது ங் எந்தப் புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிரு யடி? கல்யானைத்துக்கு முன்பு உடுத்திக்கொண்டாயே முதன் முதல் கனகாம்பர வண்ணப் புடைவை, அதைத்தான்ே?' என்று அக்காவைக் கேட்டாள் சீதா.

'போடி அது ஒன்றும் வேண்டாம். அதைக் கண்டால்

எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அதைக் கொடுத்துவிடுகிறேனடி அம்மா' என்ருள் சாவித்திரி மகிழ்ச்சி பொங்கும் குரலில்.

'ஏனேடி அம்மா! ரொம்ப ஆகி வந்த புடைவையோ இல்லையோ? அவசியம் எனக்கு வேண்டியதுதான்். அதைக் கட்டிக்கொண்டு என் சுயம்வரத்துக்கு நான் நிற்கவேண்டியது தான்் பாக்கி!' என்ருள் சீதா.

சகோதரிகள் இருவரும் "கலகல வென்று சிரித்தார்கள். சாவித்திரி இப்படிச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆயின? காகம் கத்தியது வீண்போகவில்லை. மனித உணர்ச்சிகளை அறியாத அடுப்பு ஊதியதும் பொய்க்கவில்லை. சந்துருவும். ரகுபதியும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரி காமரா அறையிலிருந்து திருட்டுத்தனமாகக் கணவனைப் பார்த்தாள். துடிக்கும் மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். 'வந்துவிட்டாரே" என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். நிலைக் கண்ணுடி முன்பு நின்று விரலின் நுனியை மைச் சிமிழில் தோய்த்துக் கண் களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வாசனை வீசும் கதம்பத்தைத் தலையில் வைத்துக்கொண்டாள். புருவத்தின் இடையில் திலக மிட்டுக்கொண்டு, கோனல் சிரிப்புடன் கண்ணுடியில் தன் அழகைக் கவனித்தாள் சாவித்திரி. ' கட்டாயம் என் கருவிழி களைக் கண்டு அவர் மயங்கவேண்டும். சிரிக்கும் உதடுகளைக் கண்டு பரவசமடையவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் என் அன்பினுல் அவரை வெல்லவேண்டும்; அடிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான்் சிறந்த வழி!' என்று உவகை எய்திய சாவித்திரி ஆசைதிரக் கணவனை ஜன்னல் வழியாகவே பார்த்துக் களித்தாள்.