பக்கம்:இருளும் ஒளியும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருகப் பிரவேசம் 171

ஏமாந்தேன். இப்பொழுது நானகவே உன்னைப் பார்ப்பதற் கென்று வந்துவிட்டேன். ஏனம்மா வரவில்லை?' என்று விசாரித்தாள்.

' வராமல் என்ன மாமி’ எனக்கு எல்லோரும் ஒன்றுதான்். தாயன் புக்காக ஏங்கியவள் நான். உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையே என்று பார்க்கும் பெண்களை எல்லாம் என் சகோதரிகளாகவே நினைக்கிறேன்.கணவன்-மனைவிக்குள் ஆயிரம் இருந்தாலும், சாவித்திரி என்னை அழைத்திருக்க வேண்டாமா? அவளுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?ட

எலரஸ்வதி கண்ணிர் விட்டு அழுது யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. கஷ்டத்திலேயே வளர்ந்து, தாயை இழந்து அவதிப்பட்டவள் அவள். பிறருடைய துன்பங்களை உணர்ந் தவள். அவள் மனம் புண்ணுகித்தான்் அழுதிருக்க வேண்டும். சந்துருவின் மனம் வாடிப்போய்விட்டது. ரகுபதி முகம் சோர வேறுபக்கம் திரும்பிக்கொண்டுவிட்டான். ஸ்வர்ணம் அங்கு நிற்கவேயில்லை. சாவித்திரி தலை குனிந்து உள்ளேபோய் விட்டாள். மனச்சாட்சி என்பது ஒன்று உண்டென்றால் அவள் தவறுகளுக்கு அதுவே பதில் கூறும்.

அமைதியாக இருந்த கூடத்துக்குத் தங்கம் உள்ளிருந்து ஒடி வந்தாள். 'பாகிலே பொரியைப் போடுவதா? பொரியிலே பாகை ஊற்றுவதா, அக்கா? எது சரி சொல் பார்க்கலாம்: ' என்ருள் சிரித்துக்கொண்டு.

ஸ்ரஸ்வதியின் முகம் மலர்ந்துவிட்டது. 'நீதான்் சொல்லேன். எனக்கு இதெல்லாம் தெரிந்து என்ன ஆகவேண்டும் சொல். நான் என்ன வீட்டுக்குள் பொரி உருண்டையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகி றேகு? உனக்குத்தான்் கல்யாணம் நடக்கப்போகிறது. எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்' என்ருள் அவள்.

இதைக் கேட்ட சந்துருவின் முகம் வாடிப்போய்விட்டது. ஸரஸ்வதி என்ன சொல்கிருள்? தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்கிருளா? இது என்ன ஏமாற்றம்?"

சாப்பிடும் கூடத்தில் மங்களமும், ஸ்வர்ணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். "அவள் சம்மதப்படுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா. அவள் போக்கே விசித்திர மாக இருக்கிறது. வட நாட்டுக்கு யாத்திரைக்கல்லவா கிளம்பி