மனித கபாலம் 39
வந்து தன்னைக் கூப்பிடட்டுமே! தன்னைக் காணுவிடில், nர !' என்று அவளைக் கூப்பிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சாவித்திரி எண்ணி எண்ணி மனம் வெதும்பினுள்.
குழந்தை மனம் படைத்த ஸரஸ்வதிக்குச் சாவித்திரியின் போக்கு புரியவில்லை. 'ஒரு வேளை கணவன், மனைவிக்குள் ஏதர் வது பிளடலாக இருக்கும். நாம் ஏன் இதில் தலையிடவேண்டும்?" என்று அவள் என்றும்போல் பழகி வந்தாள்.
நில வர்ணப் பட்டுப் புடைவை உடுத்தி, இளம் பச்சை ரவிக்கை அணிந்து சாவித்திரி அழகாகத் தோன்றினுள் ரகுபதிக்கு. சிரித்துப் பேசும் சமயத்தில் கண்ணிரும், சண்டையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கீழே தூக்கம் வராமையால் ஸரஸ்வதி வீணையில் ஹான" ராகத்தை வாசித்துக்கொண் டிருந்தாள். சங்கீதத் துக்கே குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரையில் யாவரையும் மயக்கும் சக்தி உண்டு. சாவித்திரி வீனகானத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். ரகுபதி அவளே அன்புடன் பார்த்து, சாவித்திரி! அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு விட்டாயா? ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதாக்கும்!' என்று கொஞ்சினன்.
'அதெல்லாம் ஒன்றும் இல்லை. - முகம் சிவக்கக் கண்களை முடிக் கொண்டாள் அவள்.
கீழே ஸஹான" ராகத்தை முடித்துவிட்டாள் ஸரஸ்வதி. அடுத்த பாட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. 'துாண்டிற் புழுவினைப்போல் வீணையில் ஒலிக்க ஆரம்பித்ததும், ரகுபதி, "இதோ பார்த்தாயா? இந்த வீணையின் நாதத்துக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக வைத்து விடலாம். அதன் தந்திகளே மீட்டும்போது எழும் ஒசைக்கு ஈடு வேறு எதையும் சொல்ல முடியாது. சாவித்திரி! ஸரஸ்விடம் நீ பாட்டுக் கற்றுக் கொள்ளலாமே. முன்பு ஒரு தடவை கேட்டாயே, 'உங்களுக்கு என்ன பிடிக்கும்!" என்று. எனக்குப் பிடித்தது இது ஒன்றுதான்். என் மனைவி என் எதிரில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாட வேண்டும். காலம் நேரம் போவது தெரி யாமல் நான் அதை அநுபவிக்க வேண்டும்.'-ரகுபதி உணர்ச்சி யுடன் பேசிஞன்.