மனித சபாவ ம் 41
படுப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் அயர்ந்து துங்கிவிட்டாள். சலனம் இல்லாத அவள் முகத்தில் புன்னகை மிளிர்ந்துகொண் டிருந்தது.
ரகுபதி மகத்தான் தவறு செய்துவிட்டான். கை எதிரில் இருந்த கனியை அருந்தாமல், காயைக் கணிய வைக்கும் விஷயத்தை அவன் மேற்கொண்டால் அது எளிதில் நடந்துவிடுகிற: காரியமா? ரகுபதி சிலைபோல் நின்று அவளையே கண் இமைக்கா மல் பார்த்தான்். பிறகு, சாம்பிய மனத்துடன் அவன் அறைக்குத் திரும்பியபோது சாவித்திஆ'புஸ்ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அனல் தெறிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். அவாேக் கவனியாதவன்போல் ரகுபதி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தான்். கணவன், மனே விக்கு இடையே சாண் அகலம் இடைவெளி இருந்தாலும், சாவித்திரியும். அவனும் எங்கோ ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பதாகவே நினைத்தார்கள். - -
'நாம் சொல்வதைத்தான்் இவள் கேட்டால் என்ன?’ என்று. அவன் பொருமிக்கொண்டே படுத்திருந்த்ான்.
'போயும். போயும், அவளிடந்தான்் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்! பாடு என்றால் பாடவேண்டும். ஆடு என்றால் ஆட வேண்டும்! ஒடு என்றால் ஓட வேண்டும்! வா என்றால் வர வேண்டும்! இந்தப் புருஷர்களுடைய அதிகாரத்துக்கு அள வில்லையா என்ன? ஸ்திரிகளைச் சமமாகப் பாவிக்கிருர்களாம்! பேச்சிலேதான்் எல்லாம் அடிபடுகிறது. வீட்டிலே அவனவன் மனைவியை இன்னும் அடிமையாகத்தான்் வைத்திருக்கிருன்.-- சாவித் திரி பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்விதம் நினைத்தாள். "நான் சொல்லுவதை இவள் 'உத்தரவாக” ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? கணவனின் அன்புக் கட்டளை என்று கொள்ளக்கூடாதா? வீட்டிலே பாட்டியும், பெற்ருேர்களும் இடங்கொடுத்துத் தலைமேல் ஏற்றிக்கொண் டிருக்கிரு.ர்கள். வந்த இடத்திலும் பணியும் சுபர்வம் ஏற்படவில்லை. ஆகட்டும். . . . பார்க்கலாம்' என்று தீர்மானித்துக்கொண்டு ரகுபதி துரங்க ஆரம்பித்தான்்.
நிம்மதியாகத் துரங்கும் ஸரஸ்வதி ஒரு கனவு கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அழகிய மலர் மாலை ஒன்றைக் கையில் எந்திச் சந்துரு அன்புடன் அவளை நெருங்கி வருவதை உணர்ந்து