பக்கம்:இருளும் ஒளியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இருளும் ஒளியும்

'உன் லக்ஷணம்.! உன் பிடிவாதம்! வேறு என்ன கிடக்கிறது தெரிகிறதற்கு ' என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுப் பொறுமையை இழந்தவளுக ரகுபதி கீழே உட்கார்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் பரீரென்று அறைந்தான்். அடுத்த விநாடி அவன் தன் தவறை உணர்ந்துகொண்டான். இது வரையில், பெற்ற தாயின் மனம் நோகும்படி ரகுபதி பேசி அறியமாட்டான். உடன் பிறந்தவளைப்போல் அவனுடன் ஒன்றிக வளர்ந்து வரும் ஸரஸ்வதியின் கண்களில் கண்ணிரைக் கண்டால் அவன் நெஞ்சு உருகிவிடும். பெண்களை மலரைப்போல் மென்மை யாக நடத்தவேண்டும் என்னும் கொள்கையை உணர்ந்தவன். தன்னுடைய அருமை மனைவியைத் தொட்டு அடிப்பதற்கு மனம் வருமா? கைதிண்டி அடிக்கும்படியான நீச மனுேபாவம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்பதை ரகுபதியால் உணர முடியவில்லை.

ஸ்தம்பித்து உணர்விழந்து நிற்கும் மகனை. ஸ்வர்ணம் கண்களில் நீர் பொங்க ஏறிட்டுப் பார்த்து. 'சீ! சீ! உனக்குப் புத்தி கெட்டுவிட்டதாடா ரகு? ஊரார் பெண்ணே அடிக்க உனக்கு என்னடா அப்படிப் பாத்தியம் ஏற்பட்டுவிட்டது? ஊரிலே நாலு பேர் என்ன சொல்லமாட்டார்கள்? புருஷன்னேவி தகராறு என்று உலகம் ஒத்துக்கொள்ளாது அப்பா. நடுவில் நான் ஒருத்தி இருக்கிறேன் பாரு' என்ருள். அவள் கண்கள் கண்ணிரால் நனைந்திருந்தன.

ஸ்ரஸ்வதி ரகுபதியைத் தன் அழகிய விழிகளால் சுட்டு விடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். மானப்போல் மருண்டு பார்க்கும் பார்வை ஒரு விநாடி அனல் பொறிகளே உதிர்த்தது. 'ரொம்ப அழகாக இருக்கிறது. அத்தான்்! உன்னுடைய போக்கு கொஞ்சங்கூட நன்ருக இல்லை. என்னுலேதான்ே இந்தத் தொந்தரவுகள் எல்லாம் ஏற்படுகின்றன? நான் எங்கேயாவது தொலைந்துபோகிறேன்' என்று படபட வென்று கூறிவிட்டு, கன்னங்களில் வழியும் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்.

ஸ்ரஸ்வதி கூறியதைக் கேட்டதும், சாவித்திரி 'விசுக்" கென்று எழுந்து, 'எனக்காக இங்கிருந்து யாரும் போக வேண்டாம். எனக்கும் என் மனு ஷாளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானே புறப்பட்டுப்போகிறேன். ஆமாம். . . . என்று கூறி, பீரோவிலிருந்து புடைவைகளை எடுத்துப் பெட்டியில் வைக்க ஆரம்பித்தாள்.