உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 நேர்மையோடும், நிதானத்தோடும் இப்படிப்பட்ட விசா ர ணைக் குழு போட முன் வந்ததற்காக மகிழ்ச்சி அடை கிறேன் என்று சொன்னார்கள். போடு இப்படித்தான் இன்றைக்கு அந்த விசாரணைக்குழு வதற்கான சட்டத்தை, அந்த வரைவினை நாம் கொண்டு வந் திருக்கிறோம். நான் இன்னும்கூடச் சொல்வேன் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போலத் திருத்தங்கள் இன்னின்னவை தவை என்பதை எடுத்துச் சொல்லி அவைகளைக் கலந்து ஆலோசிப்பதற்கு நல்ல வாய்ப்பினை அளித்த சட்ட அமைச்ச ருக்கு உதவியாக இருப்பது தான் இங்கே இருக்கிற ஸ்தாபன காங்கிரசானாலும், சுதந்திரக் கட்சியானாலும், நம்முடைய ஆளுங் காங்கிரசானாலும். கம்யூனிஸ்ட் கட்சியானாலும், மற்றக்கட்சிகளுடைய பொறுப்பாக இருக்க வேண்டுமென்று அங்கே எடுத்துக் காட்டி விரும்புகிறேன். நமது எதிர்ப்பு விவசாய வருமான வரியைப் பற்றி இங்கே சர்ச்சை எழுந் தது. திரு சாமிநாதன் அவர்களும், திரு நாராயணசாமி அவர் களும் இப்போது பேசிய நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் எ டுத்துச்சொன்னார்கள். இந்த விவசாய வருமான வரி தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளைப் பாதிக்கக்கூடும் என்கிற ஒரு கருத்தை நான் ஏற்கெனவே எடுத்துச் சொல்லி யிருக்கிறேன், டி ல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலும் கூட விவசாய வருமான வரியை அவர்கள் சேர்த்துக் கொள்தற்கு மாநிலச் சார்பாக நான் மறுப்புத் தெரிவித்திருக்கின்றேன். அதற்குப் பிறகும் விவசாய வருமான வரி இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் காண்கிறோம். ஆகவே விவசாயிகளுடைய ஊக்கத்தை இது இங்கே பாதித்து விடுமோ என்ற அச்சம் இருக்கிற காரணத்தினால், ஒருவேளை மத்திய அரசு இதைக் கைவிடக்கூடும். அப்படிக் கைவிடாவிட் டால் நாம் மத்திய அரசிடத்திலே உரிமையோடு கேட்பதெல் லாம், இங்கே ருக்கிற விவசாய வருமான வரியை வைத்துத் தா ன் நீங்கள் உங்களுடைய வரியைப் பெருக்கிக் கொள்கிறீர் கள்; வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறீர்கள்! உதாரணத் திற்குச் சொல்ல வேண்டுமானால் இப்போது போடப்பட்டிருக் கிற இந்த விவசாய வருமான வரியில் இப்போதுள்ள நிலை- விவசாயம் அல்லாத வருமானம் 5 ஆயிரம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு விவசாயத்தில் எவ்வளவு வருமானம் வந்தாலும் வரிகிடையாது. மத்திய சர்க்காருக்கு வரி கிடையாது. விவசா யிகளுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் மாநில சர்க்கா ருக்கு வரி இருக்கிறது. ஆனால் 5 ஆயிரம் ரூபாய் தான்