பக்கம்:இரு விலங்கு.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல வேட்கை 30%

உள்ள காம்ம் அவகாமம். பருவத்துக்குரிய உணர்ச்சி யால் மகளிரிடத்தில் மயல் கொண்டு இயநெறியில் உள்ளம் செல்லுகிறது; தன்னுடைய மனேயாளோடு வாழ்வது அறத்தின்பாற் படும். அபபடியன்றி மற்ற மகளிரைக் கண்டோ, பொது மகளிரிடத்தில் ஈடுபட்டோ உள்ளத் தைக் செல்லவிடுவது பொல்லாத காமமாகும். தன்னு டைய மணேயாட்டியிடத்தில் காதல் செய்வதை அன்புள்ள காமம் என்றும் அல்லாதவற்றைத் தீய காமம் என்றும் சொல்வார்கள்,

மனேயாட்டியிடத்தில் பெறுகின்ற இன்பம் அறத் தோடு பொருந்தியது. பிறவிதோறும் தொடர்ந்து வருகின்றவர்கள் கணவன் மனைவி என்ற கொள்கையை உடையது இந்த நாடு மனேயாட்டியோடு வாழ்வது அறம் செய்வதற்காக. அந்த அறத்தில் மனம் ஈடுபடும் பொருட்டு அறத்தோடு இன்பத்தையும் துணேயாக அமைத்திருக்கிருன் ஆண்டவன். அந்த இன்பம், அறத் தோடு பொருந்தி இருந்தால்தான் உறுதிப்பொருளில் ஒன்ருக இருக்கும். அவ்வாறின்றி வெறும் இன்பத்திற் காக மாத்திரம் ஆசைப்பட்டால் அதனுல் விளேகிறது துன்பந்தான். அது அறத்தோடு சாராது: உறுதிப் பொருள் ஆகாது. -

புறக்காட்சி புறக்கண்ணினலே புறப்பொருளேக் கண்டு ஆசைப் படும் இயல்பு எப்பொழுதும் தவருனது. அதனுல் வி&ளவது வெறும் காமம். மனேவியும் கணவனும் உள்ளத் துள் அன்புமிக்குப் பழகுவதல்ை நாளடைவில் புற அழகு. மறைந்தாலும் அக அழகு குறைவது இல்லே. புறக் கண் ணிைளுல் கண்டு அடைகிற மோகம் பலகாலம் நில்லாது. முதலில் மோகம் உண்டானல் பிறகு அறத்தோடு பொருந்தும் இன்பம் உண்டாவது எளிதன்று. மனத்தில் தோன்றிய அன்பற்ற பற்று, ம்ோகத்திற்குக் காரண மான பொருள் இல்லாமல் போனுல் மங்கிவிடும் அன்பு