பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



160 இறையனார் அகப்பொருள் (கற்பு ஊக்கங் காட்டுதற்பொருட்டாகவும் பிரியும் ; அதனானே மாற் நரசரும் திறை கொடுப்பர் என்பது.

  • இனிப், பகை தணிவினை யென்பது, தூதுவர் போலச் சந்து செய்வித்தற்குப் பிரியும் என்பதன்று ; இருவர் அரசர் நாளைப் பொருதும் இன்று பொருதும் என்று முரண்கொண்டு இருந்த நிலைமைக்கண் தான் அவருக்கரசனாகலின், 'இம் மக்களும் இவ் விலங்குகளுமெல்லாம் பட இவ்விரண்டு குலத்திற்கும் ஏதம் நிகழும்; அதனால், இப்போரொழிக்கற்பாலேன்' என்று இருவ ரையும் இரந்து சந்து செய்வித்தலும் ஒன்று ; அல்லதூஉம், தேவரும் அசுரரும் பொருதகாலத்துத் தேவரையும் அசுரரை யும், 'ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல் யான்' எனப் பாண்டி யன் மாகீர்த்தி சந்து செய்வித்தது போல, இருவரின் மிகைசெய் தீரை ஒறுப்பல்' என்று சந்து செய்வித்தலும் ஒன்று, இருவரை யும் ஒறுக்குந் துணை ஆற்றலுடைய னாகலான் என்பது அஃதே யெனின், தன்னகத்து இருந்து விட - அமையாதோ அன்னவாற் றலனாகலான், தான் செல்லவேண்டுமோ எனின், செல்ல வேண்டும் என்பது. என்னை, காதலர்ப் பிரிந்து ஒரு கருமம் முடிப்பதனின் மிக்க ஆள்வினையில்லை யென்பது. ஆதலாற் பிரிந்தே சந்து செய்விக்கும் என்பது.

இனி, வேந்தர்க்குற்றுழி என்பது, அவர்க்குச் சேவகனாய்ப் பிரியும் என்பதன்று ; தனக்கு நட்டான் ஓரரசன் சென்ற விடத்து அவற்கு ஆபதம் அறுத்தல் இனிதென்று நீக்குதற்குப் பிரியும் என்பது. இனிப், பொருட்பிணி என்பது, பொருளிலனாய்ப் பிரியும் என்பதன்று ; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாம் கிடந்ததுமன், அதுகொடு துய்ப்பது ஆண்மைத்தன்மை யன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியும் என் பது ; அல்லதூஉம், தேவர்காரியமும் பிதிரர் காரியமும் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செய்தனவல்லது பயன் படாது; என்னை, தாயப்பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார் ; ஆதலான், அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியும் என்பது. b இனிப், பரத்தை என்பது, பொதுப் பெண்டிர் மாட்டுப் பிரிவு; இவள்கண் அன்பிலனாய்க் கண்டார்கண் தாழ்ந்து 1. அருளரசனாகலின். 2. ஆய மறுதலையை வென்று நீக்குதற்குப் பிரியும். 3. புறப்பெண்டிர்.