பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



192 இறையனார் அகப்பொருள் (கற்பு குக் காரணம் இல்லை மேற்பொய்யாத் தன்மையளாகலின்" என்று முற்பட்டு ஆற்றுவித்துத் தோழியை ஓம்படை ஏவிப் பிரியவும் பெறும் என்பது, அறியப் பிரிவது வலியுடைத்து. அறியாமைப் பிரிந்த தலைமகனையுடைய கிழத்தி சொல்லிய தற்குச் செய்யுள் : 'செல்லார் அவரென் றியானிகழ்ந் தேன்சுரஞ் செல்வதென்கண் ஒல்லாள் அவளென் றவரிகழ்ந் தார்மற் றுவையிரண்டும் கொல்லார் அயிற்படைக் கோன்நெடு மாறன் குளந்தைவென்ற வில்லான் பகை போல் எனதுள்ளந் தன்னை மெலிவிக்குமே.' (ங.00) அஃதேயெனின், நிலம்பெயர்ந்து உறையவும் பிரிவும் ஒழிந் தோர் அறியவும் அறியாமையும் என அமையாதே, 'எல்லாம்' என்றது எற்றிற்கோ எனின், களவுகாலத்தும் ஒரு பிரிவு சொல் லப்பட்டதன்றே, நிலம்பெயர்ந்து உறைவது பட்டபின்றை வரை யாக்கிழவன் நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிவது என; அங்கும் அறியப் பிரியவும், அறியாமற் பிரியவும் அமையும் என் பதற்கும் சொல்லப்பட்டது என்பது. 'சேட்படும் இயற்கையது' என அமையாதே, 'கழிந்து' என்றது எற்றிற்கோ எனின், கழிந்தபின்றைக் கழிதலே யல்லது இடைச்சுரத்தே நின்றானும் அந்நிலத்தே நின்றானும் பெயர் தலில்லை என்பது; என்னை, சிற்றறிவினாரன்றே, ஒரு கரு மம் எடுத்துக்கொண்டு முடிப்பான் புக்கு, முடியாது தவிர்வார் என்பது. 'ஆடிய வெறியும் அழுங்கிய செலவும் நாடுங் காலை இல்லென மொழிப.' என்றார் பிறர். இன்னும், அறியாமற் பிரிதற்குச் செய்யுள் : / 'செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல் நல்லராக் கதுவி ஆங்கென் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.' (குறுந்-கூ) என்பதூஉங் கொள்க. (கசு)