பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
198 இறையனார் அகப்பொருள் (கற்பு அஃதாமாறு, மேல் அவ்வகையாற் பிரிவெடுத்துக்கொண்டு ஆற்றுவித்தார், ஆற்றல் கண்டு பிரிந்தவழித் தோழி தலைமகளை ஆற்றுவித்துக்கொண்டு இருந்தாளன்றே; இருந்தவிடத்துத் தலைமகனும் தான் எடுத்துக்கொண்ட வினை முடித்தானன்றே; முடித்தவழியாற் குறித்தகாலம் வந்தது என்று, மறுத்துஞ் சார்ந்தானன்றே; சார்ந்த இடத்துச் சங்கம் படகம் வந்து இசைத்தன. இசைப்பத், தோழி தலைமகனது வரவுணர்ந்து, 'எம்பெருமாட்டி, நீ இறந்துபடுவான் புக்காயால், கண்டா யன்றே, உள்ளாரால் எய்தப்படாத பொருளில்லை, நீ ஆற்றி யுள்ளாயாகின்றே இன்றும் எம்பெருமானை வழிபடுவாயாயினா யாயிற்று' என இவ்வாறு சொல்லுதல், ‘சிறைப்புறங் குறியா தோன்றலு முளவே' என்பது. 'சங்க படகம் இசைப்பச் சங்கினை வாழ்த்திச் சொல்லிய தற்குச் செய்யுள் : சங்கினை வாழ்த்தல் 'தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண் திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரை தீம் பானிற வெண் சங்கம் யார் நின்னின் மிக்க படிமையரே.' (கூகச) 'புரிவளை வான்கோடு புத்தேளோ டொத்தி திருவமர் மார்பனு மேந்தினன் தம்முன் உருவம் புரையும்நின் கேழ்.' என்பதூஉங் கொள்க. (உ) சூத்திரம் - ருசு திணையே கைகோள் கூற்றே கேட்போர் இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு பயனே கோளென் றாங்கப் பத்தே அகனைந் திணையும் உரைத்தல் ஆறே. என்பது என்னுதலிற்றோ எனின், மேற் களவும் கற்பும் உணர்த்தினார், இனி அவ்விரண்டும்பற்றி வருகின்ற பாட்டினை இக்கூறப்பட்ட பத்திலக்கணத்தானும் உரைக்க என்பது உணர்த்துதல் நுதலிற்று. 1. சங்கு படகம். 2. சங்கம் படகம்.