பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



64 | இறையனார் அகப்பொருள் (களவு 'இனி, எம்பெருமாட்டிகண்ணது என்று கருதுவேனாயின், அவள் ஒருவராற் சுட்டவும் சொல்லவும்படும் தன்மையள் அல்லளாகலான் அவள் கண்ணது . எனவும் ஆகாது. யார் அறிவார், இவர் தாமும் அவள் துணைப் பெருந் தன்மையராக லான் அவள் கண்ண து எனவும் ஐயமேயாம். இனி, இவ்வாபத்துள் ஒருவர்கண்ணதேகொல்லோ என வும் ஐயமேயாம்' பேராராய்ச்சியள் ஆகலான் கதுமெனத் துணி யாளன்றே ஒன்றன் திறத்து. இனி, அருள் காரணமாகக்கொல்லோ இத் தழையும் கண் ணியும் கொண்டுவருவது எனவும் ஆகாது, ஆற்றாத இயல்பின னாய் வரும் ஆகலான், அதன்கண்ணும் ஐயமேயாம்' என்பது. அதற்குச் செய்யுள் ; 'முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல்.' (இறையனார் - எ) என்னும் சூத்திரத்துட் காட்டுதும். அஃதேயெனின், இவளை அவட்குச் சிறந்தமை அவன் அறியுமாறு என்னை? பிறர் சொல்லினாரும் இல்லையாலோ எனின், அறிந்தானன்றே, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின் னர்த் தன்னை அவள் காணாமைத் தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்றானாக, மற்றையாரெல்லாம் தலைமகட்குச் செய்யும் வழிபாடும், இவள் விசேடத்தாற் செய்யும் வழிபாடும், எல்லார்க்கும் தலைமகள் அருளிச்செய்யும் அருளிச்செய்கையும், இவட்கு விசேடத்தாற் செய்யும் அருளிச்செய்கையும் கண்ட - மையான், 'இவளாம் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பு' என்பதனை உணர்ந்தான். உணர்ந்தமையான், அவளு ழையே செல்லும் என்பது. அஃதேயெனின், அவளுழைச் செல்கின்ற ஆயங்கள் ஐயுறாவோ எனின், எங்கனம் ஐயுறும் ; தழையும் கண்ணியும் கோடற்பொருட்டாக வேறோரிடத்துத் தனியளாய் நின்ற நிலைமைக்கண் செல்லும் என்பது. அவள் இன்னணம் தனியளாய் நிற்பது அறிந்து செல்லுமோ எனின், செல்லான்; விதியே கொண்டுசென்று தலைப்படுவிக்கும் என்பது. அஃதேயெனின், இரத்தல் கிழவோன் மேற்றே' என்னாது, 'குறையுறுதல்' என்றது எற்றிற்கோ எனின், இரத்தல் என்பது, குறையுடையார் செய்யுஞ் செய்கை செய்து ஒழுகுவது; குறை யுறுதல் என்பது, இக்குறை இன்றியமையான் என்பது படப் பசைந்து ஒழுகுவது. அஃதேயெனின், 'இரந்து குறையுறுதல்' என அமையாதோ, 'இரந்து குறையு றுதலும்' என்று உம்மை கொடுத்தது எற்றிற்கோ எனின், தெருண்டு வரைதல் சிறப்