பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



69 சூத்திரம்-எ) இறையனார் அகப்பொருள் என்பது என்னு தலிற்றோ எனின், தோழி உணர்ச்சியைப், பெய ரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : முன்னுறவுணர்தல் என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பிற்றைஞான்று அவள் கண்சிவப்பும் துதல் வேறுபாடுங் 'கண்டு கரவு நாடி உணர்வதாயிற்று என்றவாறு; எங்கனம் உணருமோ எனின், 'எம்பெருமாட்டிக்குப் பண்டைத் தன்மைத்தன்றால் இவ்வேறுபாடு, இஃது எற்றினான் ஆயிற்று, எனக்குச் சொல்லாய்' என்னும்; என, 'நெருநல் நின்னின் நீங்கி மேதக்கதோர் சுனை கண்டு ஆடினேன், நெடுங்காலமும் நின்றாடினேற்கு ஆயிற்று ; ஆகாதே, கண்சிவப்பும் நுதல்வேறு பாடும்' என்னும் ; அஃதேல், சுனையாடினோர்க் கெல்லாம் இக் காரிகைநீர்மை பெறலாமே யெனின், யானும் ஆடிக் காண்கேன்' என்னும். அதற்குச் செய்யுள் : சுளைவியந்துரைத்தல் 'தேர்மன்னு வாட்படை செந்நிலத் தோடச் செருவிளைத்த போர்மன்னன் தென்னன் பொதியிற் புனமா மயில்புரையும் ஏர்மன்னு காரிகை எய்தலுண் டாமெனின் யானுபின் போல் நீர்மன்னு நீல நெடுஞ்சுனை ஆடுவன் நேரிழையே.' 7 (சுசு) ‘ புண் தாம் அருநிறத் துற்றுத்தென் பூலந்தைப் போர்மலைர்த ஒண்தார் அரசர் குழாமுட னேஒளி வானடையக் கண்டான் பொதியில் மயிலன்ன காரிகை எய்தல் நின்போல் உண்டா மெனில்தையள் யானுஞ்சென் றாடுவன் ஒண்சுனையே.' () ‘பையுள் மாலைப் பழுமரம் படரிய நொவ்வுப்பறை வாவல் நோன்சிற கேய்க்கும் மடிசெவிக் குழவி தழீஇப் பையாந் திடுகுகவுள் மடப்பிடி எவ்வங் கூர வெந்திறல் ஆளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ் உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியும் கடுங்கண் யானை காலுற ஒற்றலிற் கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎம் நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை கோனேர் எல்வளை தெளிர்ப்ப நின்போல் யானும் ஆடிக் காண்கோ தோழி வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் (பாடம்) 1. கரவுணாடி.