பக்கம்:இலக்கண வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மொழி என்பதாம் ‘பாஷை’ யைப் பாடையென வழங்குகிறார் சேனாவரையர் (397); வடபாடை என்றும் சொல்கிறார் (401).

தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாது என்னும் கொள்கையுடைய இவர் (401), ‘குமரி வடமொழிச் சிதைவு என்றும் (196) நீர் ஆரியச் சிதைவு என்றும் (398) கூறுவது வியப்பாகாது.

செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களுள், “திசைச்சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும் செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச் சொல்லேயாம். வடசொல் ஒன்னும் பெயரல்லது செய்யுட்குரியவாகா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க” என்னும் செய்தி சங்க நூற் பரப்பை முழு துறக்கண்டு கூறிய முடிவுடையதாம்.

ஞாபகம், அநுவாதம், யோகவிபாகம், நேயம், காரகம், தாது இன்னவற்றை ஆங்காங்குரைத்து விளக்குகிறார். பதினைந்து இடங்களுக்கு மேல் சேனாவரையரின் வடமொழிப் புலமை அறியும் வண்ணம் உரை விளக்கம் அமைந்துள்ளது.

தொல்காப்பியர் வடநூலொடு மாறு கொள்ளாமல் நூலியற்றியவர் என்பதை முடிந்த முடிவாகக் கொண்டு உரை வரைந்தவர் சேனாவரையர் என்பது, ‘வடநூலுள் பொருள் வேற்றுமையான் அல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையும் ஓதப்படாமையாலும் ஈண்டும் எல்லா ஆசிரியரும் ஒரு வேற்றுமையாகவே ஓதினார் என்க. வடநூலொடு மாறு கொள்ளாமைக் கூறல் ஆசிரியர்க்கு மேற்கோளாயின் விளி வேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற் பாலராவர். அவ்வாறடக் கலிலர் எனின், அற்றன்று; விளிவேற்றுமையை எழுவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/145&oldid=1471504" இலிருந்து மீள்விக்கப்பட்டது