பக்கம்:இலக்கண வரலாறு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

காசு பிறப்பு என்னும் வெண்பா வாய்பாடுகள் சுட்டப்பட்டில சுட்டப்பட்டுள (25).
சிந்தியல் வெண்பா வகைகள் குறிக்கப்பட்டில. குறிக்கப்பட்டுள (24).
ஆசிரியரால் முற்றுப் பெறுவித்த நூல். உரையாசிரியரும் பாடி முற்றுப் பெறுவித்த நூல்.

இவை போன்ற நுண்ணிய வேறுபாடுகள் இன்னும் சில உள. ஆய்ந்து கொள்க.

முதனினைப்பு

பாயிரம் தொடங்கி உறுப்பியலை 20 காரிகைகளால் நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார். அவ்விருபது காரிகைகளையும் முறையே அடைவு செய்து "கந்தமும் தேனும்" என்னும் காரிகையால் முதனினைப் பாக்கி வைக்கிறார் உரையாசிரியர். அவ்வாறே செய்யுளியல் ஒழிபியல்களுக்கும் அமைத்துள்ளார். இவற்றால் நூன்முழுமையும் தடையற மனப்பாடம் செய்து ஒப்பிக்க வழிகாட்டியுள்ளார் என்று பாராட்டுப் பெறுகின்றார். இப்பாராட்டின் மூலவர் நூலாசிரியரா? உரையாசிரியரா? எனின் இருவருமேயாம். என்னெனின்,

நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளைக் “குன்றக் குறவன் அகவல்”, “பொன்னாரம் வெண்பாட்டு” என்பது முதலாக (9) - ஆங்காங்கே எடுத்துக்காட்டு முதற்குறிப்புப் பாடி வைத்துள்ளார். அத்தூண்டலால் அவர் பாடாத பகுதிக்குப் பாடி இணைக்கும் உரையாசிரியர், இயன் முழுமைக்கும் ஒவ்வொரு காரிகையாக இயற்றி அப்பணியைத் தொடுத்து முடிக்கின்றார். ‘பாம்பின்கால் பாம்பறியும்’ என்பது போல் நூலாசிரியர் நோக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/278&oldid=1473810" இலிருந்து மீள்விக்கப்பட்டது