பக்கம்:இலக்கண வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

இவ்வுரையாசிரியர்க்கு முன்னரும் இந்நூற்கு உரை கண்டவர் இருந்தனர் என்பது “இவ்வாறு கூறுவாரும் உளர்” என இவர் கூறுவது கொண்டு அறியலாம்.
உரை நிலை
இவ்வுரை பொழிப்புரையாகவும், குறிப்புரையாகவும் வேண்டும் அளவாற் செல்கின்றது. இயைத்துக் காட்டி இலக்கணத்தையும் எடுத்துக்காட்டையும் நிறுவுதல் அரிதாகவே கொண்டுளது. சிற்சில இடங்களில் விரிவுரை போலச் சென்றாலும் பல இடங்களில் வேண்டுமளவு உரை விளக்கம் இல்லாதும் உள்ளது. காலந்தோறும் பதிப்புகளில் உரை வேறுபாடு அமைந்துள்ளதென்றும், புதிது புதிது சேர்க்கப்பட்டதென்றும் பதிப்புரைகளின் வழியே அறிய முடிகின்றது. எனினும் இவ்வுரை நூற்பொருள் உணர்தற்கு அரிய கருவி என்பதில் ஐயமில்லை.
இன்னாஇசை என்பதை விளக்கும் உரையாசிரியர், “மென்னடை யொழுக்கத்து வல்லொற்றடுத்து மிக்கது போலவும், அந்நடை யொழுக்கத்து உயிரெழுத் தடுத்துப் பொய்ந்நலப்பட்டு அறுத்திசைப்பதுபோலவும் வரும்” என்கிறார் (20).
பாவிகம் என்னும் அணியைப் புறநடைப் பகுதியில் வைத்தது குறித்து உரையாசிரியர் எழுதுகின்றார்: முன் அதிகாரச் சூத்திரத்துப் பிற அலங்காரங்களுடன் வைத்த இதனை ஈண்டுப் புறனடையின் பின்னாக வைத்தது என்னை எனின், பிற அலங்காரங்கள் ஒரு பாட்டானே யுணரப் புலப்படும்; இஃது அன்னதன்று; ஆகலான், ஆசிரியன் வாழ்த்தென்னும் அலங்காரத்தின் பின்னரே விரவியல் வைத்தது. முன்னர் அளவே விரவுவன என்பது அறிவித்தற்கு; இஃது அன்னதன்று என்பது என்கிறார்.
வைதருப்ப நெறி கௌட நெறி பற்றிக் கூறிய பின்னர் இவ்விலக்கணம் எல்லாம் முன்னையோர் மொழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/320&oldid=1474245" இலிருந்து மீள்விக்கப்பட்டது