பக்கம்:இலக்கண வரலாறு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340


இப்பாட்டியல் அகத்தியர் வழிமுறையில் வருவது என்பதை ஆசிரியர் கூறுகின்றார். இந்நூலைக் கற்றார் எய்தும் பயன் இன்னதெனவும் கூறுகின்றார்:

“பாடலாம் செந்தமிழைப் பாடி அரனருளைக்
கூடலாம் இன்பநலம் கொள்ளலாம்—பேடனாய்
நாட்டியசீர்ப் பாவினங்கள் நாடும் சிதம்பரப்
பாட்டியலைக் கற்றார் பயன்”

என்பது அது.

காலம் - சமயம்

“சகற்கு ஈரேழு நூறுடன் முப்பஃதியைத்த ஆண்டு” எனச் சிதம்பரபுராணம் கூறுதலால் சகம் 1430 ஆகிய அவ்வாண்டு கி. பி. 1508 ஆகும். அச்சிதம்பர புராணம் இவர் தந்தையார் இயற்றியதாகலின் இவர் காலம் 16-ஆம் நூற்றாண்டு என்க. இவர் சமயம் சைவம் என்பது வெளிப்படை.

உரை

இந்நூல் முதல் மூன்று இயல்களுக்கு உரையுள்ளது. எளியது; இனியது. இதனை இயற்றியவர் எவர் என்பது புலப்படவில்லை. பாட்டியற் பகுதிக்கு உரையின்மை, அதன் எளிமை கருதி எழுதாமல் விடப்பட்டிருக்கலாம்.

பதிப்பு

தமிழ்ச்சங்க வாயிலாக இதனைப் பதிப்பித்து வெளிப்படுத்தியவர் அறிஞர் மு. இராகவ ஐயங்கார். இவரே சந்திராலோகம் வெளியிட்டவரும் ஆவர்.

அரங்கேற்றமுறை

அரங்கேற்றம் பற்றி இந்நூல் கூறுமாறு:

“கொள்ளுமிடம் விதானித்துத் தொடையல் நாற்றிக்
     கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பம்
துள்ளுபொரி விளக்கொளிர முரசி யம்பத்
     தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/385&oldid=1474344" இலிருந்து மீள்விக்கப்பட்டது