பக்கம்:இலக்கண வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவதாம்.

“வகரக் கிளவி நான்மொழி ஈந்தது”
“அம்மூன்றென்ப மன்னைச் சொல்லே”

இன்னவாறு வருவனவும் வரம்பே.

விளங்க வைத்தல்:

விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்கவைத்தவர் அரியர்.

“தாமென் கிளவி பன்மைக் குரித்தே”
“தானென் கிளவி ஒருமைக் குரித்தே”
“ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி”
“இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை”

இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்து கொண்டுளர்?

நயத்தகு நாகரிகம்

சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக் கைபோன போக்கில் இறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி 'இளையர்' உளத்தைக்கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரோ?

தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. இவ்வரலாற்றுக்கு அத்துணை விரிவு சாலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/97&oldid=1471413" இலிருந்து மீள்விக்கப்பட்டது