பக்கம்:இலக்கியக் கலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 95 அடிப்படை என்பதால், கவிதைக்கு உலகப் பெர்துமை இயல்பாகிறது. - - - இங்கே பிளோட்டோ எழுப்பிய லினாக்களுக்கு, அரிஸ்டாடில் நல்லதொரு விடையை அளிப்பதைக் காணலாம். எனவே, கலை ஆல்லது இலக்கியம் என்பது மெய்ம்மையை அப்பட்டமாகப் படி, எடுக்கிறது; இதனால், உண்மையில் இருந்து இரண்டுமடங்கு விலகிச் சென்றுவிட்டது எலும் பிளேட்டோவின் சித்தாந்தம் தவறானது என்பது உறுதிப்படுகிறது. வாழ்க்கைச் சூழல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஏற்பு ஒவ்வோர் ஆணும்பெண்ணும் எவ்வாறு எடுத்துரைப்பாரோ அவ்வாறு கலைப்படைப்பு அமைகிறது. ஆன்ல்ை அவ்விடத்திலேயே அவர்களை நின்றுவிடுமாறு படைப்பின்னர்ஷ் விட்டு விடுவதில்லை. பரத்துபட்ட நிலையில் மனித இனம் முழுமைக்கும் பொருத்தி வரக்கூடிய உலகப் பொதுமக்களைக் கண்டு அறிந்து அவற்றைப் புலப்படுத்துமாறு அது உந்துகிறது. மனிதரின் செயல்களிலும் நடத்தையிலும் உள்ள சிறப்பு இயல்புகளை உலகப் பொதுமை உடையதாகச் சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறது. இதனை உலகப்பொதுமை வாய்ந்த கவிஞ னுடைய உண்மை’:Poetic truth) என்பர். எனினும், எல்லாவகை யிலும் மெய்ம்மையை ஒத்த ஒன்றைப் படைத்துத்தரப் படைப் பாளியால் இயலாது. அதாவது ஒரு பொருளின் உயிரையும் உடலையும் துடிப்புடைய நிலையில் முழுமையாகப் படைத்துத் தர இயலாது. எனவே இந்த இழப்பை ஈடுசெய்ய வேறு எவற்றையோ சேர்த்து அவன் கலைப்படைப்பைத் தருகிறான். ஆயிர்த் துடிப் போடு மிக உயர்த்த உணர்ச்சிகளையே அவன் வாழ்க்கைrத் சித்திரிக்கிறான், மகிழ்ச்சிமிக்க கணப்பொழுதுகளில் தோன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளவுணர்வுகளையே அவன் வாழ்க்கை பர்க்க்காட்டுகிறான். இவற்றால் கலைஞன் கவிதை உண்மையைப் பற்றித்தான் கவலைப்படுகிறர்ன் என்பது எளிதில் புலனர்கும். இந்த எண்ணப்போக்குடைய ஆலைஞன் இந்தச் செய்தியோ, நடந்திருக்கக் கூடுமா என்பதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. கவிதை ஒருமை. நயம், கவிதை உண்மை' எனும் கொள்கை அடிப் படையில் இந்த நோக்கைப் புலப்படுத்த வாழ்க்ண்யில் இருந்து தமக்குத்தேவையானவற்றையே கலைஞன் தேர்ந்து எடுக்கின்றான். பொருத்தமானவற்றையும் . பிரதிநிதித்துவ இயல்புடையன வற்றையும் ஆய்வுசெய்து கண்டறிந்து அவற்றை நாடுகிறான். அவற்றைத் தன்னிறைவு உடைய சூழ்நிலையை ஒத்திசைவு 'உண்கியதாக அவன் படைக்கின்றான். கவிஞன் படைக்கும் போருளில் அமையும் உண்மை நாடக வழக்கும் அன்று: உண்கியல் வழக்கும் அன்று: அது தனிச்சிறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/113&oldid=750918" இலிருந்து மீள்விக்கப்பட்டது