பக்கம்:இலக்கியக் கலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின்கடப்பாடு 117. ஏனெனில், 'கலை, இன்பத்தைத் தந்தால் மட்டும் போதாது; அது அவனை அறவழியில் செலுத்துவதாக அமைய வேண்டும் கலை, அழகே வடிவானது; அழகே அறம்; அறமே அழகு இவ்விரண்டையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்கும் எண்ணமே, அக்காலத்திய கிரேக்கருக்குத் தோன்றவில்லை. இந்தப் பின்னணியில் இலக்கியமும் அமையவேண்டும் எனும் நோக்கம் உடையவராகப் பிளேட்டோ திகழ்ந்தார். எனவே, "அறநெறியில் மனிதனைச் செலுத்தாத, அறவுணர்வை ஊட்டாத இலக்கிய்ங்கள் நாட்டிற்கு நலம் பயவா எனும் சித்தாந்தம் அவருடைய உரையாடல்களில் பளிச்சிடுகிறது. இத்தகைய எண்ணப்போக்கு, பக்தி இயக்க காலம் முதற் கொண்டு, அணிமைக்காலம் வரையில் நம் நாட்டிலும் நிலவியது. ஐரோப்பாவில் புகிய-செம்மை இலக்கிய நெறியாளர் (Neo-Classicists) Gaft-sgib, ETIČigoldeifr@ufl–gpih (Puritans) இதே மனப்ம்ோக்கு, வீறுடன் விளங்கியது. - தம் குருநாதரின் எண்ணப்போக்கில் இருந்து, பலவகையில் வேறுபட்டு விளங்குபவர் அரிஸ்டாடில். பிளேட்டேர் கவிதையை (இலக்கியத்தை)ப் பழித்தார். ஆனால், அரிஸ்டாடிலோ, அதனைப்புகழ்ந்து போற்றினார். - - - இலக்கியம், சொல்நயமும், பொருள்நயமும், ஒச்ை இன்பமும் வாய்ந்ததாகக் கற்பவர் உள்ளத்தை மகிழ்விக்க வேண்டும் என்று அரிஸ்டாடில் கருதினார். ஆலநாட்கத்தின் ஆறு கூறுகளை அவர் வகைப் படுத்திக் காட்டியுள்ளார். அவை, பார்ப்பவரின் உள்ளத்தைக் கவருவதாக நாடகம் அமைய வேண்டும் என்பதற்காக அமைத்துக்கொள்ளப்பட்ட கலைத்திற்ன்களேயாகும். இவற்றால், காண்பவர் உள்ளத்தில். அவரவர் மனப்பக்குவத்திற்கு ஏற்ப, இன்பம் அளிப்பதாக அவல நாடகம் அமையும் எனும் எண்ணம் அவருக்கு இருந்தமை புலனாகிறது. - , ஆனால், உணர்ச்சி, தூய்மை (Katharisis) எனப்படும் சொல்லின் மூலம், அரிஸ்டாடில் ஒர் உண்மையை வெளிப் படுத்தியுள்ளார். அவல நாடகம், காண்பவர் உள்ளத்தில், அச்சத்தையும், பரிவுணர்வின் வழிப்பட்ட இரக்கத்தையும், கிளர்ந்து எழச் செய்வதாகும். இந்த இருவகை உணர்வுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/135&oldid=750942" இலிருந்து மீள்விக்கப்பட்டது