பக்கம்:இலக்கியக் கலை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - இலக்கியக் ♔ ബ്) பழம்ை பாராட்டல் - . - சுருங்கக் கூறினால் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறதோ, அவ்விலக்கணத்தை அடிப்படை யாகக் கொண்டு இம்முறை தோன்றிற்று. மேனாட்டாரைப் பொறுத்தவரை காப்பிய இலக்கணத்தை அரிஸ்டாடில் வகுத்தார். அவர் கூறிய அமைதிகள் அனைத்தும் நிறைந்ததே காப்பியம்’ என்று கூறத் தகுதி வாய்ந்தது என்று சில காலம் அவர்கள் கருதி னார்கள். "அவல நாடகங்கட்கும்’ அரிஸ்டாடில் எழுதிய திறனாய்வுக் குறிப்பே அடிப்படையாக அமைந்தது. கிறிஸ்து பிறப் பதற்கு முன்னர்த் தோன்றிய கிரேக்கப் பெரியாரான அரிஸ்டாடில் இரேக்க மொழியில் தோன்றிய பேரிலக்கியமாகிய ஹோமரின் ஒதேசியை மனத்துட் கொண்டு காப்பிய இலக்கணம் வகுத்தார். அவ்விலக்கணங்களுள் பெரும்பாலானவை உலகத்தில் வேறு எப் பகுதியில் தோன்றிய எம் மொழி இலக்கியத்திற்கும், பெர்துப் படைச் சட்டங்களாக அமைந்தன. ஆகலான் அச்சட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு பிற்காலத்தில் தோன்றிய இலக் இயங்களை ஆராய்ந்தார்கள். இம்முறையில் உள்ள பெருந் தவறு நன்கு புலனாகாமற் போகாது. எவ்வளவு சிறந்த சட்டமாயினும் ஒன்று, காலப்போக்கில் மாறுபடும் இலக்கியத்திற்கு, என்றும் ஏற்றதாகாது. மனிதன் அறிவு வளர்ந்துகொண்டே வர அவ் அறிவு வளர்ச்சிக்கு ஏற்பப் புதுமுறையில் இலக்கியம் முகிழ்க்கிறது. ஆனால் அவ்வாறு தோன்றிய இலக்கியத்தை ஆராய்வதற்குப் பழைய சட்டங்களையே அடிப்படையாகக் கொள்வது, மனித அறிவு வளர்ச்சியை மதியாமல் இருப்பதாகும். இத்தகைய இடர்ப்பாட்டில் சிக்கி மேனர்ட்டினர், 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் அல்லலுற் றனர். மிகச் சிறந்த அறிவாளியாகிய டாக்டர் ஜான்சன் மில்தன்' இயற்றிய பெருங்காப்பியமாகிய சுவர்க்க நீக்கத்தைக் குறை கூறினான். காரணம் இப்பழமை பாராட்டும் பண்பேயாகும். மேலும் இத்தகைய சட்டங்கள் எவ்வாறு இயற்றப் பெறுகின்றன என்றுங் காணல் வேண்டும். பழந்தமிழர் முறைப்படி "இலக்கியங் கண்டதற்கே இலக்கணம் இயம்பப் பெற்றது, அரிஸ்டாடில் இலக்கணம் வகுக்க இலக்கியமாகவிருந்தது ஹோமரின் நூலாகும். ஆனால் அரிஸ்டாடிலின் பின் வந்தவர்கட்கெல்லாம் இதே சட்டத்தை மிகவும் கெடுபிடியாகப் பயன்படுத்தினதால்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/162&oldid=750972" இலிருந்து மீள்விக்கப்பட்டது