பக்கம்:இலக்கியக் கலை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் பொருளும் - -- எழுதாக் கவிதை . கவிதையும் அது குறிக்கும் பொருளும் எவை என்பது பற்றியும், கவிதைக்குரிய பொருள் எது என்பது பற்றியும். காண்போம். கவிதைக்குப் பொருள் தேவையா? வேண்டியதே இல்லை. ஒசையழகும், சொல்லடுக்குந்தான் கவிதைக்கு வேண்டுவன என்று கூறுவோர் ஒரு புறம் பொருட் செறி வில்லாததும் கவிதையா? அதுவே கவிதையின் சிறப்புக்கு அறிகுறி என்பார் ஒரு புறம். இவ்விருவர் கட்சிக்கும் நடுவே கவிதை. 'தேய்புரிப் பழங்கயிறு" போலப் படாதபாடு படுகிறது. ஒரு சிலர் எழுதாக் கவிதை' என்று ஒன்றைக்கூறி அது அநுபவிப்பவனுக்கு * மட்டும் விள்ங்குமே தவிர அதைச் சொல்லால் எழுதப்புகின் இயலாததொன்றாய் முடியும் என்றுகூடக் கூறுகிறார்கள். அவர்கள் கூற்றில் உண்மை எவ்வளவு உண்டு என்பது ஒருபுறம் இருக்க அங்கனம் எழுதாக்கவிதையை நாம் சீர்தூக்கிப் பார்க்கவே முடியா திகின் அதனை ஒருபுறம் நிறுத்திவிடுவோம். ஒருவன் மனத்துள் தோன்றியது எவ்வளவு சிறந்த கருத்தாக இருப்பினும் அதற்கு அவன் ஒரு வடிவு கொடுத்த பின்னரே நாம் அதனை அநுபவிக்க முடியும். மேலும் அவ்வடிவே கலை என்ற பெயரையும் அடைகிறது. ஆகவே எழுதாக் கவிதை என்பது அர்த்தமற்ற ஒன்று. ... ' ' . . . . . . . கவிதையும் ஒரு கலை. கலைகளின் வேலை என்ன? தன்னைப் படைத்தவன் என்ன உணர்ச்சியை வெளியிட நினைத்தானோ அவ்வுணர்ச்சியைப் பிறருக்கு வழங்குவதே அவற்றின் தொழில். அவ்வாறாயின் கவிதைக் கலை எதை நமக்கு வெளியிடுகிறது? கவிஞன் எந்தப் பொருளை அதனுள் பொதிந்து வைத்தானோ, அதனையே நமக்கும் அது அளிக்கும். கவிஞன், பொருளை அல்லது பொருளை அடிப்படையாகக் கொண்ட உணர்ச்சியை எங்ானம் பொதிந்து வைக்கிறான்? சொற்களைப் போர்த்த உணர்ச்சி, கவிதை என்று கூறப்படும் பாடல் வடிவாக உள்ளது. சொற்களில் விளங்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/231&oldid=751048" இலிருந்து மீள்விக்கப்பட்டது