பக்கம்:இலக்கியக் கலை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 இலக்கியக் கல்ல வ்ெறுக்கப்பெறுகிற காலங்களில், மனிதன் அமைதியை வெளியே அடைய முடியாமையின் உள்ளே நாடி இருக்கிறான் அவ்வாறு அவன் செய்த முயற்சியே இத்தகைய அகபப்ாடல்களாக வடி வெடுத்தன. இப்பாடல்களில் யாரையும் புகழ்வதும் இகழ்வதும் இல்லை. தன்னுள்ளே தான் இன்பம் காண விழையும் இம்முயற்சியே அகப்பாடல்கள், இந்நேரங்களில் இருவராகச் சேர்ந்து இன்பம் அநுபவிப்பதை விடக்கூடத் தனி மனிதனாக நின்று தன்னுள்ளே இன்பம் காண, அமைதி காண முயல்வது சிறந்தது. இலக்கியத்தில் நேர்ந்த ஒரு பெரும் புரட்சி இது என்றே கூறல் வேண்டும். மனிதன் தன் சமுதாயத்தையும் நாட்டையும் இனத் தையும் அரசனையும் புகழ்ந்து பரவிய நிலை போய் தனிப்பட்ட மனிதனிடம் ஒரு சிறப்பைக்காண முற்படுகின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள ஆன்மாவின் சிறப்பினை அறியவும், அவ்வான் மர்வினுள் ஒரு தனி உலகமே இருக்கிறது என்பதை உணரவும், அவ்வுலக்த்துள் புகுந்து புற உலகின் அல்லல் இன்றித் திரியலாம் என்பதை உணர்வும் ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டது. வேறு

    • .*.*.*. * * * * * ۹:لم،غ ٢ ۰ ٢ : . ه --- s “ ” ow. t; 录。。 - 阔 . . . ; ذن. عد ؟؟ எவ்வகைப் பாடல்களைக் காட்டிலும் இவ்வகப் பாடல்களே ஆன்ம்

வெளிப்பாட்டுக்குச் சிறந்த கருவியாக அமைந்தன. அகப்பாடலின் வளர்ச்சி இவ்வகப் பாடல்களே நாளடைவில் சமயப் பாடல்களாக முகிழ்த்தன. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் போர், அல்லது பஞ்சம், அல்லது பெருந்துன்பம் ஒன்று நடைபெற்று முடிந்தவுடின் சமயக் கிளர்ச்சி ஏற்பட்டிருத்தலைச் சரித்திரம் நமக்கு அறிவிக்கின்றது. பிரான்ஸ் தேசத்தில் ஒன்றரை நூற்றாண்டிற்கு முன் உலகத்தைக்கலக்கிய வீரன் நெப்போலியன் ஆட்சியில் க்த்தோலிக்க சமயத்தைப் புறவாழ்க்கையிலும் ஏற்றுக் கொள்ளுமாறு செய்தான். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளக் காரணம் அதற்குமுன் பிரெஞ்சு மக்கள் பட்ட பெருந் துன்பமும், பிரான்ஸ் இருந்த குழப்பமான நில்ையுமேயாகும். இன்று நம் காலத்தில் நடந்த போரின் விளைவாக, உல்கப் ப்ோரில் மூழ்கியிருந்த இரஷ்யா தேசம், மன்ம் மாறிப் பாதிரி ப்ோர்களைப் பழைய நிலையில் வைத்தன்மயும் "நாம் அறிந்ததே. இதேபோன்ற ஒரு நிலை தமிழ்நாட்டிற்கும் வந்தது. சைவ வைணவ சமயகுரவர்கள் எப்பொழுது தமிழ்நாட்டில் தோன்றி ஆன்மீஉருக்கமான கவிதைகளைப் பொழிந்தனர்; எல்லாம் ஏழிாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதானே? க்ர்ரண்ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/291&oldid=751114" இலிருந்து மீள்விக்கப்பட்டது