பக்கம்:இலக்கியக் கலை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 375 பல்வகைக் கையறுநிலைகள் ஆனால் இதனிலும் வேறுபட்ட பல கையறுநிலைகள் உண்டு. தமிழ் இலக்கியங்களில் சமுதாயம் முழுவதற்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட நட்டங்களைக் கண்டு வருந்திப் பர்டிய கையறுநிலைகளும் நிரம்ப உள்ளன. இதே பாரியின் இறப்பைக் குறித்துக் கபிலர் என்ற பெரும்புலவர் பெருமான் இதே கையறுநிலை என்று துறை யில் எட்டுப் பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனாலும் என்ன வேற்றுமை: தந்தையரைக் குறித்துப் பாரிமகளிர் எவ்வளவு உருக்கமான முறையில் கூறுகின்றனர்! ஆனால் பறம்பு நாடு போனது பற்றியும், இரவலர் ஒரு வள்ளலை இழந்தது பற்றியும் அவர்கள் கருதவில்லை. தந்தை போய்விட்டாரே என்ற கவலை தான் அவர்களுக்கு. ஆனால் கபிலர் பாடல்களில் பறம்புநாடு அழிந்ததையும், இரவலர் கிடைத்தற்கரிய வள்ளலை இழந்தமை யுமே பெரியனவாகக்கூறப்பெறுகின்றன. இனி நாட்டின் நிலைக்கும் பொதுவாகச் சமுதாயத்திற்கும் இரங்கிக் கூறிய கையறு நிலைகளும் உள்ளன. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்பவனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளி என்பவனும் போரிட்டுக் களத்தில் இருவருமே மாய்ந்தனர். பரணர் என்ற கவிஞர் அககாட்சியைக் காண்கிறார். நெஞ்சம் உருக்கும் அக்காட்சியில் ஈடுபட்ட அவர் அம் மன்னர் களுடைய நாட்டை நினைந்து பார்க்கிறார். மன்னரை இழந்த அந்நாடுகள் எவ்வளவு வருந்தும் என நினைத்துக் கீழ்வருமாறு பாடுகிறார் ** -- - - - 'சாந்தமை மார்பின் ങുകേർ பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தன்ர் இனியே என்னா வதுகொல் தானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித் தண்புனல் பாயும் யாணர் அறாஅ வைப்பிற். . . . . . . . - காமர் கிடக்கை அவர் அகன்தலை நாடே" (புறம், 63) (சாந்தணிந்த மார்பில் நெடிய வேல் பாய்ந்தமை யின் இருவரும் இறந்தனர், ஆம்பல் தண்டாற் செய்த வளையணிந்த மகளிர் குளிர்ந்த நீரில் பாயும் புதிய வருவாயை உடைய நாடு இனி என்ன ஆகுமோ? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/294&oldid=751117" இலிருந்து மீள்விக்கப்பட்டது