பக்கம்:இலக்கியக் கலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இலக்கியக் கலை படிப்போருடைய உள்ளத்தைத் திருத்திச் செம்மைப் படுத்தும் வகையில், சாதிக்கொடுமைகளையும், தீண்டாமையின் இழிவையும் உணர்த்தி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் சிறப்புமிகு சிந்தனையைப் பொருத்தமான ஒருவகை நடைநலத்தோடு, கபிலர் எனும் புலவர், இந்த நூலில் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இந்த நூலில் எடுத்துரைக்கும் கருத்திற்கே முதன்மைஇடம் தரப்பட்டுள்ளது; அந்தக் கருத்தை ஆசிரியர் கலைநயத்தோடு வெளிப்படுத்துவன்தத் தம்முடைய நோக்கமாகக் கொள்ள வில்லை. தம்முடைய வாச்கர்களுக்குத் தாம் கூறவிரும்பும் கருத்துகள் எளிதில் புரியுமாறு அமையவேண்டும் என்னும் நோக்கத்தோடு மட்டுமே, கபிலர், இந்த அகவலைப் படைத் துள்ளார் என்பதை மேற்போக்காக இந்த நூலைப் படிப்பவர் யாவரும் உணரமுடியும். அந்தக் கருத்துக்களைத் தம்முடைய வாதமுறைக்கு ஏற்பத் தொடர்புடையதாக அமையுமாறு எடுத்துரைப்பதில் வல்லவராகக் கபிலர் காட்சி அளிக்கிறார். குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக, இலக்கியத்தின் இயல்புகள் சில கபிலர் அகவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அதனுடைய வடிவம் செய்யுளால் அமைந்து இருக்கிறது. எதுகை, மோனை இடம் பெற்றுள்ளன, இலக்கியத்தின் உயிராகக் கருதப்படும் உணர்ச்சிப் பெருக்கும் ஒரளவிற்குப் பொங்கிவழிகிறது. மேலே கண்ட கபிலரகவலின் அடிகளில் இடம் பெறாத இலக்கியப் பண்புகளை, நாம் எளிதில் எடுத்துரைக்கலாம். அவை, கலையழகு, கற்பனை வளம் என்பனவாகும். இந்தப்பாடலில் எடுத்துரைக்கப்படும் செய் தி க ள் உண்மையானவையாக இருக்கலாம். வாதாடும் முறை, அறிவாராய்ச்சிக்குப். பொருந்தி வரக்கூடியதாகவே தோன்றுகிறது. ஆனால், இந்த இலக்கியத்தின் நேர்க்கமும்,'எடுத்துரைக்கும் வெளியீட்டுப்பாங்கும் வெவ்வேறாக ஆனால், பாரதியாருடைய. குயில்பாட்டில் நோக்கமும் வெளியீட்டுப் பாங்கும் ஒன்றோடெர்ன்று இணைந்தும், இழைந்தும் உள்ளன. மற்றும் மெய்மையாகவோ, பொய் யாகவோ, இருக்கக்கூடிய எந்தச் செய்தியையும் இப்பாடல் எடுத்துர்ைக்கவில்லை; இதைப்போன்றே பொருத்தமான அல்லது பொருத்தமற்ற வழக்கு எதிர் வழக்குகள் இதில் இட்ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/66&oldid=751282" இலிருந்து மீள்விக்கப்பட்டது