பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இலக்கியக் காட்சிகள்


எங்கள் மார்பகங்கள் அடியாராய் அல்லாத

பிறரின் தோள்களைச் சேரா, எங்கள் கைகள் உனக்கல்லாத பிறர்க்கு எப்பணியினையும் இயற்றா; எங்கள் கண்கள் இரவும் பகலும் வேறொன்றினையும் காணா, இந்தப் பரிசு

ஒன்றினை மட்டும் எங்கள் தலைவராகிய நீவிர் எங்கட்கு வழங்கிவிட்டால், கிழக்கே தோன்றும் கதிரவன் எத்திசையில் எழுந்தாலும் எங்கட்கு ஒரு கவலையும் இல்லை’

என்கின்றனர்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போங்கேள்: எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள்சேரற்க: எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க: கங்குல் பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க: இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!

(திருவெம்பாவை; 1.9) மணிவாசகப் பெருந்தகையின் இக் கூற்றோடு “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் ஏமாப் போம்; பிணியறியோம்; இன்பமே எந்நாளும் துன்ப மில்லை என்று வீரத்தோடு முழங்கிய திருநாவுக்கரசப் பெரு மானின் பின்வரும் தேவாரத் திருப்பாடல் ஒப்பு நோக்கி உணரத்தக்கது:

வானம் துளங்கிலென்? மண் கம்ப மாகிலென்? மால் தானம் துளங்கித் தலைதடு மாறிலென்? தண்கடலும் மீனம் படிலென்? விரிசுடர் விழிலென்? ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆள்பட்ட

(உத்தமர்க்கே (நான்காம் திருமுறை; 112ஆம் பதிகம்: 8.)