பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கிட்கிந்தா ராமன்

‘கற்பார் இராம பிரானையல்லால் மற்றுங் கற்பரோ!’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இராமனைப் பற்றிப் பேசுவதும் கேட்பதும் எழுதுவதும் பு னி த த் தன்மை வாய்ந்த செயலாகும். தன்னை வெட்டுகின்ற கோடரிக்கும் மணத்தைக் கொடுக்கும் இயல்பு வாய்ந்தது சந்தனமரம் எ ன் று சொல்வார்கள். அதனைப்போல இராமனைப் பற்றிப் பேசுகின்ற எவரும் பெருமை பெறுவர். எனவே தான் யானும் துணிந்து காகுத்தன் கான்முளை குறித்துத் தங்கள் முன்னர் ப் பேசத் துணிந்தேன்.

‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உ ய ர் கம்பன்’ என்று போற்றப்படும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வழி நின்று, கிட் கிந்தா ராமனின் சிறப்புக்களை நோக்குவோம். அறிவியலில், அதுவும் சிறப்பாக இயற்பியல் விரவிய Gaugujuatláo (Pnysical Chemistry) Gustus#45% for Flo எடையை (Equivalant weight) ஆக்ஸிஜன் அடிப்படையில் கணித்துத்தான் கூறுவர். எனவே நாமும் தமிழகத்தில் இராமனைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்களிலும், நூல் களிலும்,செவிவழிச் செய்திகளிலும் குறிப்புக்கள் இருந்: தாலும் துல்லியமான அளவுகருவியாகிய க ம் பனி ன் இராமாவதாரத்தைக் கொண்டே மதிப்பிடுவோம்.

கம்பனுடைய தனித்தன்மை அவனுடைய பாத்திரப் படைப்பிலும், கட்டுக் கோப்புத் திறனிலும்தான் மிகுதி