பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தென்றல் வரவு

பழந்தமிழர் இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையின் இனிய சூழலில் அவர்கள் வாழ்வு துலங்கியது. முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பியனார் முதற்பொருள் என்று நிலத் தையும் பொழுதையுமே கொண்டார். வாழ்வின் முதலாக, வாழ்க்கைக்கு முதலாக இருப்பன நிலமும் பொழுதுமே அல்லவா! முதற்பொருளின் பின்னணியில் கருப்பொருள் களின் சூழலில் உரிப்பொருளின் வாழ்வு பொலிவுற்றது.

பழந்தமிழர்கள் நிலங்களுக்குப் பெயரிட்டமையும், பொழுதுகளுக்குப் பெயரிட்டமையும் அவர் தம் கூர்த்த மதிநிலத்தைப் பறைசாற்றும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குன்றத்தில் பூக்கும் மலர் குறிஞ்சியாகும். அததகு சிறப்புடைக் குறிஞ்சி பூத்தலின் அந்நிலம் ‘குறிஞ்சி யாயிற்று. கார்காலக் கவினை மிகுதிப்படுத்திக் காட்டில் மலரும் முல்லை மலர், தான் மலரும் நிலத்திற்குப் பெயர் தந்தது. மருத நிலத்தில் மருதப் பூக்கள் மிகுதி யாகப் பூத்தலின் அந்நிலத்திற்கு அப்பெயர் வந்தது. கட லோரப் பகுதிகளில் நெய்தற் பூக்கள் மலர்தலின் அப்பகு திக்கு நெய்தல் எனப் பெயர் வழங்கிற்று. முல்லையும் குறிஞ் சியும் தம் இயல்பான வளத்திற்குறைவுபட்டு மழையின்மை காரணமாக வளங்குறைந்தது, பாலையெனும் நிலமாகத்