பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இரட்சணிய யாத்திரிகத்தின்

இலக்கியச் சிறப்பு o

முன்னுரை

ஆங்கிலத்தில் ஜான்பனியன் அவர்கள் செய்த, திருப் பயணியின் முன்னேற்றம் (Pilgrim’s Progress) என்ற நூலின் வழிநூலாகிய இந் நூல், சிறந்த இலக்கியம் எவ் வாறு இலங்குதல் வேண்டும் என்று வழிகாட்டும் நூலாக’ விளங்குகிறது. எச்சமயத்தார் ஆயினும் விருப்புடன் ஏற்றுக் கற்குமாறு செய்யவல்ல சுவைகள் அனைத்தும் ஒருங்கு கொண்டு, ஒப்பற்ற இலக்கியமாகத் திகழும் இவ் ‘இரட்சணிய யாத்திரிக'த்தின் சிறப்புகளைக் காண்போம்.

இலக்கியப் பொருள்

‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’ என்பது நன்னூல். சிறந்த இலக்கியம், கற்பாரை அறமும், பொருளும், இன்பமும், வீடும் அடையுமாறு செய்வித்தல் வேண்டும் இன்பது இதன் பொருளாகும். பாவி ஒருவனின் மோட்ச வீடு நோக்கிய பயணம் பற்றிய பெருங்காப்பிய மாகும் இந்நூல். பாவத்தின் காரணமாக என்றும் அழிவுக் குரியதே உலகம் என்பதை உணர்ந்த கிறித்தவன் ஒருவன், நாச உலகத்தினின்றும் தப்பிப் பேரின்ப உலகை அடைய விழைகிறான். நல்லூழால் பேரின்ப நாடு செல்லும்