பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு 143:

என்ற பாடல், இக் காவியத்தின் முதற் பாடலாகத் திகழ்கிறது.

இயேசுவின் மறைவு குறித்த மக்களின் புலம்பல் முழுதும், இராமனின் பிரிவு குறித்த மக்களின் புலம்பலே ஆகும். இராவணன், தன் பால் துாது வந்த அங்கதனிடம் அவனுக்கு அரசு தருவதாக ஆசைகாட்ட, அங்கதன்,

‘நீ தரக்கொள்வேன் யானே இதற்கினி நிகர்வே

(றெண்ணில் நாய்தரக் கொள்ளுஞ் சீயம் கல்லர சென்று நக்கான் ‘

(கம்ப. யுத்தகாண்டம்; அங்கதன் துாதுப் படலம் 29)

என்று வினவுவதை இராமாயணத்தில் காணலாம்.

இக் காவியத்தில் அழிம்பனிடம் ஆன்மிகன்,

“மாய முறும் இன்ப நலம் வாழ்வுசுகம் ஆதி ஆயவைத ரத்துணிதி! அம்ம; அழ கிற்றால்! மேயமனை தோறும்ஏறி மிச்சில்விழை நாய்கொல் சீயமுடி பெற்றரசு செய்யும்வகை செய்யும்?’

(பா.. எ 422)

என்று கேட்பதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.

இக்காவியத்துள் இடை இடையே வரும் தேவாரப் பாடல்கள். நாயன்மார்களின் தேவாரப் பாடல்களை அடி

யொற்றிச் செய்தனவே ஆகும்.

“நாதன் நாமம் நமச்சிவாயவே! என முடியும் நாவுக் கரசரின் பாடல்களைப் போல இவருடைய தேவாரங்களும் ‘இயேசு நாமமே!’ என்று முடிகின்றன.