பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இலக்கியக் காட்சிகள்


என்ற பாடலில் பொன்முடியார் மேதினியில் மாந்தராகப் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகளை உணர்த்தி நிற்கின்றார்.

இன்று காட்டுத் தீப்போலத் பொதுவுடைமைக் கொள்கை உலக முழுதும் பரவி வருகிறது. புரட்சி விதையை விதைத்துவிட்டுச் சென்ற அறிஞர் காரல் மார்க்ஸ், அத் தருவினைத் தண்ணிர் விட்டுப் பட்டுப் போகாமல் பாதுகாத்த லெனின் போன்றோர்கள் நாட் டிலே புரட்சியிலே புரட்சியிலே பூப்பதுவாம் இவ்வுலகம் என்னும் பொருளுக்கு அழகுதரும் பூலோக சொர்க்கமாய் விளங்கும் உருசியாவின் கொள்கையை ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னரே ஒரு கவிஞன் பாடிச் சென்றார், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று. வாழ்தலை இனிமையாக வும் கொள்ளாமல் ஒர் வெறுப்பு வந்தவிடத்து இனிமை யற்றுக் கொடுமை உடையதாகவும் கருதாமல் சமநோக் கோடு கருதி நம் கடப்பாட்டினைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்ற பண்பாட்டு மன அமைதியினைப் பூங்குன்றனார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்ற புறநானுாற்றுப் பாடலில் அறிவுறுத்துகின்றார்.

பகுத்துண்டு பல்லுயிரோம்புதலை வாழ்க்கையின் கட மைகளுள் ஒன்றாகக் கொள்ள வேண்டும்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு

(குறள்; 216) என்ற குறள் இதனையே உணர்த்தி நிற்கின்றது.