பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இலக்கியக் காட்சிகள்


நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே

(புறம், 34 : 5-7) என்ற பாடல்பகுதி அறிவித்து நிற்கிறது.

அடுத்துத் திருக்குறளுக்கு வருவோம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

(குறள், 45) என்ற குறள் இல்வாழ்க்கையை, இலக்கியத்தின் நோக்கத் தினை இனிதாக எடுத்து இயம்புகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

(குறள் , 391) என்ற குறள் கற்றவழி வாழ வேண்டும் என்பதை அறி வுறுத்தி நிற்கிறது.

குணம்காடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைகாடி மிக்க கொளல்.

(குறள், 504) இக் குறள் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கணவன் மனைவியாக வாழும் குடும்ப வாழ்க்கைக்கும் மிகுதியாகப் பயன்படுகிறதன்றோ?

திறனல்ல தற்பிறர் செய்யினும் கோநொந்து அறனல்ல செய்யாமை நன்று

(குறள்; 157)

என்பது எத்துனை நீதி நிறைந்த மொழி!