பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் I9

என்ற மணிமேகலைப் பகுதியில் இவ்வுலகில் பரமார்த்த தத்துவ ஞானிகள், கள், பொய், களவு, கொலை, காமம் ஆகிய ஐந்தனையும் நீக்குபவர் களையே நிறைதவ நெஞ்சினர் என்றும், நீ க் கா த வ ர் க ைள நரகத்தில் உழலுபவர் என்றும் கொள்வர் என்று விழுமிய வாழ்வு நெறியினை வற்புறுத்துகின்றார்.

அறமே வாழ்க்கைக்கு மிக்க விழுத்துணையாவது என்பதை,

இளமையும் கில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது

(மணிமேகலை 22 : 1.35-138)

என்ற பகுதியில் உணர்த்துகின்றார் சாத்தனார்.

ஆற்றா மாக்களின் அரும்பசி களைந்து வாழும் மெய்ந் நெறி வாழ்க்கையே உயர்த்த வாழ்க்கை என்பதை,

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(மணிமேகலை 11 : 95-96)

. ன்ற பகுதியில் புலப்படுத்துகின்றார். இப்படி வாழ்க்கை அறங்கள் பலவற்றை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் பாங் ைென மணிமேகலையில் பல இடங்களில் காணலாம்.

கல்வியிற் பெரியனாம் கம்பன் இராமாயணம் .ான்னும் காவியக் கோயிலைக் கட்டினான். ‘அவன் தொடாதது ஒன்றும் இல்லை தொட்டதை அழகுபடுத் காமல் விட்டதில்லை என்று அறிஞர் ஜான்சனைப் பற்றிக்