பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கடலும் கலமும்

வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் மிக்க இனம் தமிழினமாகும். தமிழ்க் குடியின் பழமையினைக் குறிப்பிட வந்த ஐயனாரிதனார் என்னும் சேர அரசர் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்த குடி என்று போற்றியுள்ளார். மேலும் ஒரு நாட்டின் தொழில் களிலே தலையாய தொழில் உழவுத் தொழிலேயாகும். திருவள்ளுவரும் தம் நூலில் உழவு என்றோர் அதிகாரத் தினை வகுத்துள்ளார்.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை’

என்றார். உழவினையடுத்துப் போற்றப்படும் தொழில் வாணிகமே. அதிலும் உள்நாட்டு வாணிகத்தைப் பார்க்கினும் வெளிநாட்டு வாணிகமே மிகச் சிறந்ததாகக் கருதப்படும். ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு உழவும் வாணிகமுமே சிறந்த தொழில்களாகும். உழவாலும் வாணிக வளத்தாலும் முன்னேற்றம் பெற்ற நாடே உலகில் நாகரிக நாடு என்று மதிக்கப்பெறும்.

1. திருக்குறள் 1031