பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் கலமும் 29

இவ்வாறு ஒலியெழுப்பிக் கடலில் மரக்கலங்கள் செல்லாத காலத்தில் பெரிய கழியில் உலவும் சுறாமீன்கள அச்ச மின்றி மனஞ் செருக்கித் திரியும் என அகநானுாறு குறிப் பிடும்:

கடல்பா டவிந்து தோணி நீங்கி நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்”

ஒடமும் தோணியும்

அறத்துறை அம்பிகள் என்று கூறப்பட்ட ஒடங்கள் பெரியோராயினும் சிறியோராயினும் ஆற்றைக் கடக்க வருவோரை ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்று விடும்.

உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும் அறத்துறை யம்பியின் மான’

பெரிய வலைகளைக் கடலிலிட்டுப் பெருமீன்களைப் பிடிக்கப் பரதவர்கள் அம்பிகளைக் கடலிற் செலுத்துவர். இவ்வாறு செலுத்தப்படும் அம்பிகள் பரிக்கோற்காரர் பிணித்துச் செலுத்துகின்ற அடக்குதற்கரிய களிற்று யானையை யொத்திருக்கும்,

வடிக்கதிர் திரித்த வன்ஞாட் பெருவலை இடிக்குரற் புணரிப் பெளவத்து இடுமார் நிறையப் பெய்த வம்பி காழோர் சிறையறுங் களிற்றி ற் பரதவ ரொய்யும்.’

கடலோடுங் கலங்கள்

பெருங்கடலில் செம்மாந்து திரியும் ஒடுகலம் நாவாய் எனப்பட்டது. புகார்த் துறைகளில் நாவாய்கள் நிற்கும்

9. அகநானு று : 50 : 1-2 10. புறநானுாறு : 381; 23-24 11. நற்றிணை : 74 : 1-4