பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வெறியாட்டு

மொழி மக்கள் மனத்தினைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி எனலாம். மொழி எண்ணத்தை வெளிப் படுத்தும் கருவியாக அமைவதனால் அம் மொழியில் அமைந்துள்ள இ ல க் கி யங் க ள் அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக் கூறுகளை எடுத்து மொழியும் பெற்றியுடன் திகழ்கின்றன. தமிழ்மொழியின்கண் சிறப்புற்றுத் திகழும் பழைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் அக்கால மக்கள் வாழ்வியலினை வளமுறக் காட்டிநிற்கும் கருத்துக் கருவூலங்களாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் எனக் கூறப்படும். இப் பழம் பெரும் இலக்கியங்கள் இயற்கையின் பின்னணியிற் பெரு வாழ்வு வாழ்ந்த தமிழர் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மனிதனின் வாழ்க்கைக் கூறுகளில் சமயத்திற்குத் தனியானதோர் இடம் உண்டு. மனிதனைப் பக்குவப் படுத்தும் நெறிக்குச் சமயம் என்று பெயர். மக்கள் உயரிய குறிக்கோளொடு விழுமிய வழியில் செல்லச் சமயம் உதவு கின்றது. தமிழர்க்குக் கடவுள் நம்யிக்கையும் அதனால்

1. “The language is a mirror of their (People) minds—” Pillstleury and Meader—The Psychology of Language, P. 290

2. The language is the vehicle of thought.