பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு 4.7”

பனந்தோட்டினைக் கடப்ப மலரோடு சூடி, தாளத்தோடு

பொருந்த முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்து வேலன் வெறியாடு களத்தில் கூத்தயர்ந்தான்.19

இச் செய்தியினை வெறிபாடிய காமக் கண்ணியார் நவில்கிறார். வெறியாட்டுப் பற்றிய சிறந்த பாடல்களைப் பாடிய சிறப்பால் இப் புலவர் இச் சிறப்பினைப் பொருத்த முறப் பெற்றுள்ளார்.

வெறியாட்டில் வேலன்

ஐந்குறுநூற்றில் அமைந்துள்ள வெறிப்பத்து’ என்னும் பகுதியில், தலைவியின் பொலிவற்ற தோற்றத் திற்கு முருகனே காரணம் எனக் கூறி வேலன் முருகனைப் பரவுவான்’ என்றும்,’ குறுந்தொகையில், மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் முருகக் கடவுளால் வந்தது என்று வேலன் கூறி விழாவயர்வான்’ என்றும்?? கூறப்படுகின்ற செய்திகளால் வேலனின் செயல்கள் விளக்க முறுகின்றன வெறியாடும்பொழுது வேலன் கழற்காயை உடம்பில் அணிந்துகொண்டு படிமக்கலத்தைத் துாக்கிக் கொண்டு முருகணங்கின் குறையென வேலன் மொழி வான்”. வெறியாட்டில் ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையையுடைய பிரப்பை ைவ த் து வழிபடுவர்.’

__ =

19. அகநானுாறு : 5-19 20. ஐங்குறுநூறு - 241-250 21. ஐங்குறுநூறு - 249-1-2 22. குறுந்தொகை : 111 : 1-2 23. ஐங்குறுநூறு : 245 : 1-3

24. மறிக்குர லறுத்துத் தனைப்பிரப் பிரீஇ-குறுந்

தொகை : 263 : 1

=