பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

புறக்கண்ணால் காணத் தக்க காட்சிகள், இயற்கைக் காட்சிகள்; அகக் கண்ணால் கண்டு களிக்கத் தக்க காட்சி கள் இலக்கியக் காட்சிகள், புறத்தே காணும் காட்சியினும், இலக்கியம் வழங்கும் இனிய கர்ட்சிகள் நெஞ்சில் நிழல்ாடி நிலைத்த இன்பம் வழங்கத்தகும் நீர்மையுடையனவாகும். ‘செஞ்சொற் கவி இன்பம்’ என்று கம்ப நிாடர் பாராட்டு வது இக் கவிஞர் இலக்கிய இன்பத்தையே யன்றோ!

பல்வேறு சமயங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு கட்டாயத்தின் பேரில் இக்கட்டுரைகள் உருப்பெற்றன். “இலக்கியத்தின் நோக்கங்கள்’ என்னுங் கட்டுர்ை என் கல்லூரி மாணவப் பருவத்தில் கருக் கொண்டதாகும். ‘கடலும் கலமும்’ என்னுங் கட்டுரை சென்னையில் நடை பெறற இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத் தரங்கிற் படிக்கப் பெற்றது. இதுபோன்றிே.அண்ணாமலை நகரில் நிகழ்ந்த மேற்கானும் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரையே வெறியாட்டு’ என்பதாகும். க்லித்தொகை காட்டும் கற்பு நெறி’ எனுங் கட்டுர்ையும் இவ்வகையில் முகிழ்த்ததேயாகும். கோவையிலிருந்து மலர்ந்த நாடக விழா மலரில் ‘நாடக இலக்கியம் இடம் பெற்றது. ‘சைனரும் தமிழ்நாடும் தமிழ்நாடு அரசாங்க் ம்ல இரான்றுக்கு எழுதப் பெற்றது. பழந்தமிழரின் உலக நோக்கு தனித் கட்டுரை. மதுரைத் தமிழ்ச் சங்க மலரில் இடம் பெற்றது . இசைத் தமிழின் மறுமலர்ச்சி.” ‘எங்கெழிலென் ஞாயிறு எமக்கு தருமபுர ஆதீன ஞான சம்பந்தத்தில் ஒளிர்ந்ததாகும். சென்னைக் கம்பர் கழக ஆண்டு விழாப் பேச்சு, கிட்கிந்தா ராமன்’ எனும் தட்டுரையாக வடிவு பெற்றது. தென்றல் வரவு’ ‘இளந் தெனறல்” எனும் திங்கள்ரித்ழில் வந்த்து. இரட்சணிய் யாத்திரிகத்தின்_இல்க்கியச் சிறப்பு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நடத்திய கவியரசர் கிருட்டினப் பிள்ளையின் 150வது ஆண்டு விழாச் சொற்பொழிவின் கட்டுரை யாக்கமாகும்.

இலக்கிய ஆர்வம் மிகுந்த தமிழுலகம் என் முயற் சியினை வரவேற்கும் என்னும் துணிபுடையேன். முயற

சி. பா.