பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புநெறி 6 I

வியின் மூங்கிற்றோள்களில் துயிலப் பெறுவான்’ என்று பல படித்தாகவெல்லாம் ஆயர் மகளிர் தமக்குள்ளே பேசிக் கொள்வர்:

அவ்வழி முள்ளெயிற்று ஏர் இவளைப்பெறும் இதோர் வெள்ளேற்று எருத்து அடக்குவான். ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்பெறும்

(வைமருப்பின் காரி கதனஞ்சான் கொள்பவன்-ஈரரி வெரூஉப்பினை மான்நோக்கின் கல்லாள் பொது (இக் குரூஉக்கண் கொலையேறு கொள்வான்-வரிக்குழை வேயுறழ் மென்றோள் துயில்பெறும் வெங்துப்பின் சேஎய் சினனஞ்சான் சார்பவன்-என்றாங்கு அறைவனர் கல்லாரை ஆயர் முறையினால் நாள்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் மிடைமிசைப் பேணி நிறுத்தார் அணி.*

மேலும், இப் பாட்டின் இறுதியில், பிறராற் கொள்ளுதல் அரிதாக நின்ற கொல்லேறான காரியின் சினத்திற்கு அஞ்சாது பாய்ந்து வென்ற ஆய மகனுக்கே, ஆர்வமுடன் ஆயரும் பெண்ணைக் கொடுக்க முடிவு செய்தனர். அலர் துாற்றிய ஊராரின் உச்சியிலே மிதித்ததுபோல் அல்லவோ அவர் செயல் அமைந்தது’ என்று தோழி கூறும் கூற்றில் களவு வழிப்பட்டுப் பின்னர் கற்பு நெறிப்படும் தலைவியின் வாழ்வு கிளத்தப்படு வதனைக் காணலாம்.

நேரிழாய் கோளரிதாக நிறுத்த கொலையேற்றுக் காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர்கொடை நேர்ந்தார் அலரெடுத்த ஊராரை யுச்சி மிதித்து.’

24. கலித்தொகை, முல்லைக்கலி; 4: 18. 28. 25. கலித்தொகை, முல்லைக்கலி; 4; 73.76.