பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இலக்கியக் காட்சிகள்


மாட நித்தம் நெல்லுத் துணியாக நிவந்தஞ் செய்த நம்வாய்க் கேழ்விப்படி சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜய ராஜேந்திர ஆசார்யனுக்கு இவன் வமிசத்தாருக்கும் காணி யாகக் கொடுந்தோமென்று பூரீ காரியக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தர்களுக்கும் திருவாய் மொழிந்தருளி திருமந்திர ஒலை...... வந்தமை யிலும், கல்வெட்டியது. திருவாலந் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆ. சா ரி ய ன் உடை யார் வைய்கா சிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேசுவர நாடகமாட, இவனுக்கும் இவன் வம்சத்தாக்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் இராஜகேசரியோடொக்கும் ஆடவலானென்னும் மரக்காலால் நீத்த நெல்லுத் துாணியாக நூற் றிருபதின் கலநெல்லும் ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தெய் பெறச் சந்திரா தித்தவற் கல்வெட்டித்து.’

இந் நாடகம் நெடுங்காலம் நஞ்சைத் தரணியிற் நடை பெற்று வந்ததென்றும், தஞ்சையை மராட்டியர் கைப் பற்றி ஆளத் தொடங்கிய காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் வரலாற்றாராச்சி அறிஞர்கள் குறிப் பிடுவர்.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துத் திருப் பாதிரிப்புலியூரில் உள்ள பாடலிபுரீசுவரம் கோயிற் கல் வெட்டு பூம்புலியூர் நாடகம் அக்கோயிலில் நடைபெற்று வந்த செய்தியினை எடுத்துரைக்கின்றது. இவ்வாறான இன்னும் பல செய்திகளைக் கொண்டு பிற்காலச் சோழர் கள் காலத்தில் நாடகக் கலை பெற்றிருந்த நல்ல நிலை யினை அறியலாம்.