பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சைனரும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டினைப் புண்ணிய பூமி என்று ஆன்றோர் வழங்குவர். இங்குப் பல்வேறு சமயங்கள் பல்வேறு காலங்களில் கிறப்புறத் திகழ்ந்திருக்கின்றன. வரலாற்றுத் தொன்மை மிகுந்த சங்ககாலத்தில் சமயப் பொறை தமிழ் நாட்டில் துலங்கியது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாய் இலங்குகின்றன. ஒரே குடும்பத்தினுள்ளும் பல் வேறு சமய நம்பிக்கைகளைத் தழுவியவர்கள் தங்களுக்குள் ஏதும் கலகம் விளைவித்துக் கொள்ளாமல், ஒற்றுமை யுணர்வுடன் அமைதி காத்து வாழ்ந்தனர் என்பதனை அறிய முடியும். சமயங்கள் அன்று மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையினையும் தெளிவினையும் அமைதியையும் ஊட்டின எனலாம்.

சைவம், வைணவம் என்று இன்றளவும் தமிழ்நாட்டில் சிறப்புறத் துலங்கிவரும் சமயம் இந்நாட்டிலேயே தோன் றிக் கிளைத்து வளர்ந்து நின்று நிலவிவரும் பழம்பெரும் சமயங்கள் எனலாம். அவ்வாறின்றி வட நாட்டினின்றும் தென்னாடு போந்து நந்தமிழ்நாட்டில் புகுந்த சமயங்களா கச் சமணமும் பெளத்தமும் விளங்குகின்றன. புத்தர் பிரான் பொலிந்த காலத்திலும் அவர்க்குச் சற்று முன்பும் வாழ்ந்த வராகக் கருதப்படும் வர்த்தமானர், தமக்கு முன் அருக சுமயத் தலைவர்களாகத் திகழ்ந்த 23 தீர்த்தங்கரர்களின் சமயக் கோட்பாடுகளை விளக்குபவராகத் தம்மைக் கூறிக்